சர்வதேச நீதி கோரி யாழில் சுழற்சிமுறையிலான உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பம்

25 Sep, 2025 | 06:20 PM
image

(எம்.நியூட்டன்)

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தினரின் ஏற்பாட்டில் தமிழ் மக்களுக்கு சர்வதேச நீதி கோரி சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் யாழ்ப்பாணத்தில் இன்று (25) ஆரம்பமானது.

இப்போராட்டம் யாழ்ப்பாணம் செம்மணியில் இன்று காலை ஆரம்பமான நிலையில் எதிர்வரும் 29ஆம் திகதி வரை தொடர்ந்து நடத்தப்படவுள்ளது.

இலங்கையில் உள்நாட்டு யுத்தத்தின்போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள்  மற்றும் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் உள்ளிட்ட விவகாரங்களுக்கு நீதி வேண்டியும், உள்நாட்டுப் பொறிமுறையை நிராகரித்தும், சர்வதேச விசாரணையை வலியுறுத்தியும், செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்திற்கு நீதி கோரியும் இந்த உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தியாகதீபம் திலீபனின் திருவுருவப் படத்துக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு ஆரம்பமான இந்தப் போராட்டத்தில், வடக்கின் ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் என பெருந்திரளானோர் கலந்துகொண்டுள்ளனர்.

போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள், நாட்டின் உள்நாட்டுப் பொறிமுறையை நிராகரிக்கின்றோம், தமிழ் இன அழிப்புக்கும் காணாமல் ஆக்கப்படுதல் உள்ளிட்ட போர்க் குற்றங்கள் மற்றும் மனிதப் புதைகுழிகள் முதலான விடயங்களில் நாம் சர்வதேச சுயாதீன விசாரணையை மட்டுமே கோருகின்றோம் முதலான கோரிக்கைகளை இதன்போது முன்வைத்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிரதமர் ஹரிணி அமரசூரிய லண்டனில் வசிக்கும்...

2026-05-21 16:24:09
news-image

சமர்க்களநாயகன் பிரிகேடியர் பால்ராஜிற்கு சபையில் அஞ்சலி...

2026-05-21 16:17:59
news-image

வெசாக் தானசாலைகளில் குளிர்பானங்களுக்குப் பதிலாக சூடான...

2026-05-21 16:14:47
news-image

வவுனியா பொது வைத்தியசாலையில் பன்முக மருத்துவக்...

2026-05-21 15:55:37
news-image

காஸா நோக்கிய மனிதாபிமான கப்பல் பேரணி:...

2026-05-21 16:40:19
news-image

கைத்தொலைபேசி தொலைந்தால் அல்லது திருடப்பட்டால் என்ன...

2026-05-21 15:52:10
news-image

பாலியல் துஷ்பிரயோக வழக்கு : வன்கொடுமைக்கு...

2026-05-21 15:44:28
news-image

எபொல்லா வைரஸ் தொற்று ; விமான...

2026-05-21 15:07:23
news-image

மட்டு.ஏறாவூரில் நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த பழமையான துப்பாக்கி,...

2026-05-21 15:02:19
news-image

ஸ்ரீபாத யாத்திரை பருவத்தின் போது இதுவரை...

2026-05-21 15:00:40
news-image

தலசீமியா நோய் கட்டுப்பாடு மற்றும் நோயாளர்...

2026-05-21 14:38:31
news-image

பல்லேகம ஹேமரத்தின தேரருக்கு எதிரான வழக்கு...

2026-05-21 14:21:34