மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியிலுள்ள ஆரையம்பதி பாலமுனை சந்தியில் அமைக்கப்பட்டுள்ள பஸ்தரிப்பு நிலையத்தின் கூரை தகடுகள் இல்லாமையால் பஸ்தரிப்பு நிலையத்தில் பஸ்வண்டிக்காக காத்திருக்கும் பிரயாணிகள் சுட்டெரிக்கும் வெயிலில் பல்வேறு அசௌகரியங்களை எதிர் நோக்கிவருவதாகவும் இதந்த பஸ்தரிப்பு நிலை கூரை இல்லாமல் இருப்பது சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கண் இல்லைய என பொதுமக்கள் கடும் விசனம் தெரிவிக்கின்றனர்.
குறித்த பஸ்தரிப்பு நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்ட கட்டிடத்தின் மேற் கூரைக்கு பிளாஸ்ரிக் கண்ணாடியிலான கூரை உடைந்து முற்று முழுதாக இல்லாமல் போயுள்ளது இந்த நிலையில் பஸவண்டிக்காக காத்திருக்கும் பொதுமக்கள் சுட்டெரிக்கும் வெயிலில் நிக்கமுடியாது பல்வேறு அசளகரியங்களை எதிர் நோக்கிவருகின்றனர்
இந்த பஸ் தரிப்பு கூரை கடந்த ஒரு வருடத்துக்கு மேலாக இல்லாமல் போயுள்ளது இருந்தும் இதனுடன் சம்மந்தபட்ட திணைக்க அதிகாரிகள் இதற்கு இதுவரையம் நடவடிக்கை எடுக்காது என்ன செய்து கொண்டிருக்கின்றனர்? மக்களின் வரிபணத்தில் சம்பளமாக பெற்றுக் கொள்ளும் இந்த உத்தியோகத்தர்களே சம்மந்தப்பட்ட திணைக்களங்களே மக்களுக்கு சேவை செய்யாது யாருக்காக வேலை செய்கின்றனர்?என கடும் விசனம் தெரிவித்தனர்
இது தொடர்பாக உரிய அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு வந்தும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவே இதனை கருத்தில் கொண்டு உடன் நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM