வெனிசுவெலாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

Published By: Digital Desk 3

25 Sep, 2025 | 11:27 AM
image

வெனிசுவெலாவின் வடமேற்கே ஜூலியா மாகாணத்தில் மெனி கிராண்ட் என்ற இடத்தில், தலைநகர் காரகாஸ் நகரில் இருந்து 600 கி.மீ. மேற்கே சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இது ரிச்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவாகி இருந்தது. இந்நிலநடுக்கம் 7.8 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. நாட்டின் பல்வேறு மாகாணங்களிலும், அண்டை நாடான கொலம்பியாவிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.

இதனால், எல்லை பகுதியருகே அமைந்த வீடுகள், அலுவலக கட்டிடங்களில் இருந்து பலர் தப்பி வெளியே ஓடினர். எனினும், இரு நாடுகளிலும் உயிரிழப்பு பற்றி எந்தவித தகவலும் வெளிவரவில்லை. ஆனால், அரசு தொலைக்காட்சியில் வெனிசுவெலா ஜனாதிபதி நிகோலஸ் மதுரோ அறிவியல் சார்ந்த நிகழ்ச்சியை தலைமையேற்று நடத்தினார்.

நிலநடுக்கத்தின்போதும், அதற்கு பின்னரும் இந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இடையூறு எதுவும் ஏற்படவில்லை. இதன்பின்பு, ஜூலியா மாகாணத்தில் 3.9 மற்றும் பரினாஸ் மாகாணத்தில் 5.4 என்ற அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமெரிக்காவுடனான அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு ஈரான் இன்னும்...

2026-04-18 18:28:54
news-image

ஹோர்முஸ் நீரிணைக்கு அருகில் இரண்டு கப்பல்கள்...

2026-04-18 16:56:24
news-image

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்:...

2026-04-18 15:40:40
news-image

ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் மூடியது ஈரான்:...

2026-04-18 15:07:16
news-image

அமெரிக்காவுடன் அடுத்த கட்ட பேச்சு பாகிஸ்தானில்...

2026-04-18 12:12:45
news-image

நேட்டோ நாடுகளின் உதவி எங்களுக்கு தேவையில்லை...

2026-04-18 11:26:10
news-image

ஹிஸ்புல்லாவுடனான மோதல் இன்னும் முடிவடையவில்லை –...

2026-04-18 10:36:57
news-image

ஹோர்முஸ் நீரிணையில் போர்க்கப்பல்களுக்கு தடை: ஈரான்...

2026-04-18 03:40:14
news-image

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை என...

2026-04-18 03:31:19
news-image

போர்நிறுத்த காலத்தில் ஹோர்முஸ் நீரிணை முழுமையாக...

2026-04-17 19:48:53
news-image

இந்தோனேசியாவில் ஹெலிகொப்டர் விபத்து ; பயணித்த...

2026-04-17 16:50:06
news-image

தாய்லாந்தில் சோங்க்ரான் பண்டிகை : “ஏழு...

2026-04-17 12:01:00