கடனைத் தீர்ப்பதற்கான பிரத்யேக வழிபாடு

24 Sep, 2025 | 09:54 PM
image

இன்றைய சூழலில் பெரும்பாலானவர்கள் தங்களுடைய பொருளாதார சக்திக்கு ஏற்ற வகையிலான கடன் சுமையுடன் தான் வாழ்வை எதிர் கொண்டிருக்கிறார்கள். சிலருக்கு மட்டும்தான் கடன்களை சீரான வடிவில் திருப்பி செலுத்துவதற்கான வாய்ப்புகளும், பாக்கியமும் கிடைக்கிறது.

பெரும்பாலானவர்கள் கடனை வட்டியுடன் திருப்பி செலுத்துவதில் பாரிய இடர்பாடுகளை தான் சந்திக்கிறார்கள். கடன் தொகையுடன் வட்டி சேர சேர அதனை திருப்பி செலுத்துவதற்கான மனநிலையில் மாற்றம் ஏற்பட்டு, விரக்தி நிலையில் கடன்காரர்களாகவே தங்களை கருதிக் கொண்டு தங்களின் மனித வளத்தை பயன்படுத்திக் கொள்ளாமலே காலத்தை கடத்துகின்றனர்.

இந்தத் தருணத்தில் கடன்கள் எந்த வடிவத்தில் இருந்தாலும் கழுத்தை நெறிக்கும் அளவைவிட கூடுதலாக இருந்தாலும் அதிலிருந்து விடுபடுவதற்கான சூட்சமமான வழிபாட்டை எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் வழங்கி இருக்கிறார்கள்.

இதற்கு தேவையான பொருட்கள் : கிராம்பு

எம்முடைய சமையலறையில் இடம்பெறும் ஒரு பொருளும், வாசனை  பொருளுமான கிராம்பினை வாங்கி வந்து வைத்துக் கொள்ள வேண்டும். 'கடனை நேர்மையாக திருப்பிச் செலுத்துவதற்கான வாய்ப்பை உருவாக்கி கொடு இறைவா' என இறைவனை மனதார நினைத்து குறிப்பாக ஆஞ்சநேயரை மனதில் நிறுத்தி, அவருடைய வெற்றி மந்திரமான 'ஸ்ரீ ராம ஜெயம்' எனும் மந்திரத்தை நாளாந்தம் 108 முறை காலையில் எழுத வேண்டும்.

அதன் பிறகு ஒவ்வொரு வியாழக்கிழமையிலும் 21 என்ற எண்ணிக்கையிலான முனை உடையாத முழு கிராம்பினை மாலையாக தொடுத்து, அதனை அருகில் இருக்கும் பெருமாள் ஆலயத்திலோ அல்லது தனி சன்னதியுடன் வீற்றிருக்கும் ஆஞ்சநேயருக்கு சாற்றி... 'கடன் சுமையிலிருந்து விடுவித்து விடு இறைவா' என ஆஞ்சநேயரை வணங்கிட வேண்டும்.‌

இதுபோல் தொடர்ந்து நீங்கள் ஏழு வாரம் கிராம்பு மாலையை ஆஞ்சநேயருக்கு சாற்றி வழிபடத் தொடங்கினால் கடன் சுமையிலிருந்து விடுபடுவதற்கான வழி பிறக்கும்.

தொகுப்பு‌: சுபயோக தாசன்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வாஸ்து தோஷமற்ற காலி காணி வாங்குவதற்கான...

2026-07-18 16:01:41
news-image

ஆடி மாதம் என்ன செய்யலாம்?

2026-07-17 16:06:56
news-image

தனவந்தராக வளர்வதற்குரிய சூட்சம குறிப்பு..!

2026-07-16 17:17:34
news-image

வாராகி அம்மனின் அருள் கிடைப்பதற்கான விசேட...

2026-07-15 15:02:03
news-image

கணவன் - மனைவி இடையேயான கருத்து...

2026-07-14 17:26:25
news-image

தொழிலில் வெற்றி பெறுவதற்கான பிரத்யேக வழிபாடு!

2026-07-13 17:20:07
news-image

கர்மா தொடர்பான கெடுபலன் குறைவதற்கான எளிய...

2026-07-11 16:58:36
news-image

தடையற்ற வருவாய் கிடைப்பதற்கான எளிய வழிமுறை..!

2026-07-10 15:21:24
news-image

நினைத்ததை சாதிக்கும் வல்லமை வழங்கும் சூட்சம...

2026-07-09 18:36:55
news-image

அரசாங்க பணி கிடைப்பதற்கான சூட்சம வழிபாடு..!?

2026-07-08 14:58:00
news-image

வாராகி அம்மனுக்குரிய பிரத்யேக தீப வழிபாடு

2026-07-07 17:13:45
news-image

தொழிலில் வெற்றி பெறுவதற்கான பிரத்யேக குறிப்பு..!

2026-07-06 15:19:29