இலங்கையில் முப்பதாண்டுகளாக காணப்பட்ட பயங்கரவாதமானது முற்றாக ஒழிக்கப்பட்டுவிட்டது எனக் கூறினாலும் அதனை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என இலங்கை பொலிஸ்மா அதிபர் பூஜித ஜெயசுந்தர தெரிவித்தார்.

இன்றைய தினம் யாழ்ப்பாணம் தலைமை பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்றுவரும் சிவில் பாதுகாப்பு குழுக்கள் உடனான சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் அவ்வாறு முடிவுக்கு கொண்டுவரப்படாத பயங்கரவாதம் எங்கோ ஒரு மூலையில் முளைத்துக்கொண்டு தான் இருக்கின்றது எனவும் பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.