ஆசிய கிண்ண இறுதிப் போட்டிக்கு குறிவைத்து பங்களாதேஷை இன்று எதிர்த்தாடுகிறது இந்தியா

24 Sep, 2025 | 03:39 PM
image

(நெவில் அன்தனி)

ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்றுவரும் ரி20 ஆசிய கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டிக்கு தகுதிபெறுவதை குறிவைத்து இந்திய அணி இன்றைய தினம் பங்களாதேஷை எதிர்த்தாடுகிறது.

இன்றைய போட்டியில் வெற்றிபெற்றால் இந்தியா முதலாவது அணியாக இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெறும். அத்துடன் இலங்கையின் இறுதி ஆட்ட வாய்ப்பு அற்றுப்போவது உறுதியாகிவிடும்.

அதேவேளை, பாகிஸ்தான் - பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் வெற்றிபெறும் அணி இந்தியாவை இறுதிப் போட்டியில் எதிர்த்தாட தகுதிபெறும்.

ரி20 ஆசிய கிண்ண கிரிக்கெட்டில் ஏ குழுவில் இடம்பெற்ற இந்தியா முதல் சுற்றில் ஐக்கிய அரபு இராச்சியம், பாகிஸ்தான், ஓமான் ஆகிய அணிகளை வெற்றிகொண்டு தோல்வி அடையாத அணியாக சுப்பர் 4 சுற்றுக்குள் நுழைந்தது.

சுப்பர் 4 சுற்றில் தனது ஆரம்பப் போட்டியில் பரமவைரியான பாகிஸ்தானை 6 விக்கெட்களால் இந்தியா வெற்றிகொண்டது.

அதனைத் தொடர்ந்து இன்று தனது இரண்டாவது சுப்பர் 4 போட்டியில் பங்களாதேஷை இந்தியா எதிர்த்தாடவுள்ளது.

இந்த இரண்டு அணிகளும் ரி20 கிரிக்கெட் அரங்கில் 17 தடவைகள் நேருக்கு நேர் மோதியுள்ளன. அவற்றில் ஒரே ஒரு போட்டியில் மாத்திரமே பங்களாதேஷ் வெற்றிபெற்றுள்ளது. மற்றைய 16 போட்டிகளிலும் இந்தியா வெற்றிபெற்றுள்ளது.

முந்தைய போட்டி பெறுபேறுகளின் அடிப்படையிலும் இரண்டு அணிகளில் இந்தியா பலம்வாய்ந்தது என்ற அடிப்படையிலும் இந்தியா வெற்றிபெற்று  இறுதிப் போட்டிக்கு முன்னேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணியில் ஆரம்ப வீரர் அபிஷேக் ஷர்மா, ஷுப்மான் கில், திலக் வர்மா, சஞ்சு செம்சன், ஹார்திக் பாண்டியா  ஆகியோர்  துடுப்பாட்டத்திலும் ஜஸ்ப்ரிட் பும்ரா, ஹார்திக் பாண்டியா, வருண் சக்ரவர்த்தி, குல்தீப் யாதவ், அக்சார் பட்டேல் ஆகியோர் பந்துவீச்சிலும் திறமையை வெளிப்படுத்தி இந்திய அணியை வெற்றிபெறச் செய்வர் என நம்பப்படுகிறது.

அதேவேளை, சுப்பர் 4 சுற்றில் இலங்கையை 4 விக்கெட்களால் வெற்றிகொண்ட லிட்டன் தாஸ் தலைமையிலான பங்களாதேஷ் அணி இந்திய அணிக்கு சவாலாக விளங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சய்ப் ஹசன், தொளஹித் ஹிரிதோய், லிட்டன் தாஸ், தன்ஸித் ஹசன் ஆகியோர் கணிசமான ஓட்டங்களைப் பெற முயற்சிப்பதுடன் பந்துவீச்சில் முஸ்தாபிஸுர் ரஹ்மான், தஸ்கின் அஹ்மத், மெஹெதி ஹசன் ஆகியோர் பிரதான பங்காற்றுவர்.

ஒட்டுமொத்தத்தில் இந்த போட்டி இரண்டு அணிகளுக்கும் தீர்மானம் மிக்கதாக அமையும் அதேவேளை, இப் போட்டியை இந்தியா இலகுவில் நழுவ விடாது என கருதப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஓய்வை அறிவித்தார் இலங்கையின் அதிவேக ஓட்ட...

2026-07-21 15:14:26
news-image

மாற்றுவீரர் டொரெஸ் மேலதிக நேரத்தில் புகுத்திய...

2026-07-20 11:08:12
news-image

16 ஆண்டுகளுக்குப் பிறகு பிபா உலகக்...

2026-07-20 05:03:51
news-image

பிபா உலகக் கிணத்தை வெலலப் போவது...

2026-07-19 14:37:01
news-image

கோல் கெலன்ட்ஸ் அணி 5 விக்கெட்களால்...

2026-07-19 13:38:29
news-image

கோல் மழை பொழியப்பட்ட போட்டியில் பிரான்ஸை...

2026-07-19 10:04:41
news-image

சகோதர கழகங்களுக்கு இடையிலான சுப்பர் லீக்...

2026-07-19 09:14:36
news-image

ரீஸா ஹெண்ட்றிக்ஸ், குல்பாதின் நய்ப் அபாரம்;...

2026-07-18 21:25:07
news-image

கிரிக்கெட் ஜாம்பவான் சேர் கார்பீல்ட் சோபர்ஸ்...

2026-07-18 09:51:09
news-image

நடப்பு சம்பியன் புளூ ஸ்டார் கழகத்தை...

2026-07-18 05:26:17
news-image

கோலாகல ஆரம்ப விழாவுடன் எல்பிஎல் தொடங்கியது;...

2026-07-18 00:35:39
news-image

வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் ஆறுதல் வெற்றியை...

2026-07-18 08:46:44