வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்த NDB அக்கரைப்பற்று கிளை புதிய இடத்தில

24 Sep, 2025 | 03:01 PM
image

NDB வங்கி   அக்கரைப்பற்று கிளையை  அம்பாறை வீதியில்  இலக்கம் 71 இல் அமைந்துள்ள அதன் புதிய கட்டிடத்தில்  செப்டம்பர் 10, 2025 அன்று வைபவ ரீதியாக திறந்து வைத்தது.

இது சமூகத்திற்கு சேவை செய்யும் அதன் தொடர்ச்சியான பயணத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிப்பதாக அமைந்துள்ளது.

2015 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட  அக்கரைப்பற்று கிளையானது அன்று முதல், ஒன்பது ஆண்டுகளுக்கும் மேலாக பிராந்தியம் முழுவதும் உள்ள  குடும்பங்கள், தொழில்முயற்சியாளர்கள்  மற்றும்  வர்த்தகங்கங்களுக்கு நிதியுதவியை வழங்கி ஆதரிப்பதன் மூலம் தனது வாடிக்கையாளர்களுக்கு பெருமிதத்துடன்  சேவையாற்றி  வருகிறது.

இந்த புதிய வங்கிக்கிளை திறப்பு விழாவில் NDB வங்கியின் சிரேஷ்ட துணைத்தலைவர் சஞ்சய பெரேரா, சில்லறை வங்கிப்பிரிவின்  துணைத் தலைவர் ஸிஹான்  ஹமீத், வடகிழக்கு பிராந்தியத் தலைவர் பிருந்தபன் செல்வநாயகம், வர்த்தக நிதி, கொடுப்பனவுகள் மற்றும் தீர்வுகளுக்கான உதவி துணைத் தலைவர் கங்கா வணிகரத்ன, கிளை செயல்பாடுகளின்  தலைவர் வின்ஜய ஜயசிங்க, இஸ்லாமிய வங்கிப்பிரிவு  தலைவர் பஹார் நாயன் உள்ளிட்ட வங்கியின் சிரேஷ்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். மேலும் NDB யின் ஊழியர்கள் மற்றும் மதிப்புமிக்க வாடிக்கையாளர்களும்  இந்நிகழ்வில்  கலந்து கொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right