மாணவி வித்தியா படுகொலை வழக்கின் பிரதான சந்தேக நபரான சுவிஸ்குமார் கொழும்புக்கு தப்பிச் செல்ல உதவியமை தொடர்பில் கைது செய்வதற்காக தேடப்பட்டு வரும் உப பொலிஸ் பரிசோதகர் ஸ்ரீகஜன்  பொலிஸ் சேவையில் இருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளார். 

பொலிஸ் சேவைக்கு தொடர்ச்சியாக அவர் வராமல் தலைமறைவாகியிருக்கும் நிலையிலும் குறித்த குற்றச் சாட்டு தொடர்பில் கைதுசெய்யப்பட தேடப்பட்டு வரும் நிலையிலும் அவர் இவ்வாறு பணி இடைநிறுத்தம் செய் யப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர தெரிவித்தார்.

அவரை கண்டிப்பாக நாம் கைது செய்வோம். அதற்கான நடவடிக்கைகள் சிறப்பு பொலிஸ் குழுவினரால் முன்னெ டுக்கப்பட்டுள்ளன. அவர் தேடப்படும் ஒரு சந்தேக நபர். அவரை நாம் பணி இடைநிறுத்தம் செய்துள்ளோம். கண்டிப்பாக நடவடிக்கை  எடுத்தே தீருவோம்' என இது தொடர்பில் பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.

மாணவி கொலை வழக்கில் ஒன்பதாவது சந்தேக நபரான சுவிஸ்குமார் என அழைக்கப்படும் மகாலிங்கம் சசிக்குமார் என்பவர் 2015 ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் இருந்து தப் பிச் சென்ற நிலையில் 19 ஆம் திகதி வெள்ளவத்தை பகுதியில் வைத்து வெள்ளவத்தை பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டார்.

குறித்த நபர் தப்பிச் செல்வதற்கு உடந்தையாக இருந்தார் என்று  அக்கால பகுதியில் வடமாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபராக பதவி வகித்த லலித் ஜெயசிங்க கைதுசெய்யப்பட்டுள்ளார். 

அத்துடன் அவருடன் அக்கால பகுதியில் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய உப பொலிஸ் பரிசோதகர் சு.ஸ்ரீகஜன் என்பவரும் உடந்தையாக செயற் பட்டார் என குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. இந்நிலையில் ஸ்ரீகஜனை தேடி விசாரணை தொடர் கின்றது. அவரது கடவுச்சீட்டும் முடக்கப்பட்டுள்ளது.  இந்நிலையிலேயே அவரை கண்டிப்பாக கைதுசெய்ய வுள்ளதாக பொலிஸ் மா அதிபர் நேற்று அறிவித்தார்.