நாட்டின் பல பாகங்களிலும் இன்றும் மழை மற்றும் மண்சரிவுகள் நீடிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ள நிலையில் மக்கள் அனைவரும் அவதானத்துடன் இருக்குமாறும் அத்திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

குறிப்பாக வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் இன்று மழைபெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் எதிர்வு கூறியுள்ளது.

இதேவேளை, மாத்தறை மற்றும் இரத்திபுரி மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என தேசிய கட்டிட ஆய்வு மையம் தெரிவித்துள்ளதுடன்  மண்சரிவு ஏற்படக்கூடிய இடங்களில் வசிக்கும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இரத்தினபுரி, கேகாலை, கண்டி மற்றும் களுத்துறை மாவட்டங்களில் 50 மில்லிமீற்றர் அளவில் மழை வீழ்ச்சியை எதிர்பார்க்க முடியுமெனவும் சில பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யுமெனவும் சில பிரதேசங்களில் பலத்த காற்றும் வீசக்கூடும் எனவும் அத் திணைக்களம் மேலும் எதிர்வு கூறியுள்ளமை குறிப்பிடத்தக்து.