"முகப்­புத்­தக ப்ரெண்ட்ஸ்" என தம்மை அடை­யா­ளப்­ப­டுத்திக் கொண்ட ஒரு குழு­வினர் புவக்­பிட்­டிய பகு­தியில் இரு நாட்­க­ளாக இரவு வேளை­களில் நடத்­திய களி­யாட்ட  நிகழ்ச்­சியின் ஏற்­பாட்­டாளர் போதைப்­பொருள் தடுப்பு பிரி­வினால் கைது செய்­யப்­பட்­டுள்ளார்.

கடந்த 29 மற்றும் 30 ஆம் திக­தி­களில் இடம்பெற்ற இக்­க­ளி­யாட்ட நிகழ்வில் ஈடு­பட்ட இப்­பி­ரி­வினர் போதையில் சுய நினை­வி­ழந்த நிலையில் காணப்­பட்­ட­தா­கவும் போதைப்­பி­ரி­யர்­க­ளிடம் சமூ­கத்தில் பர­வ­லாக பயன்­ப­டுத்­தப்­படும் குளிசை வகைகள் இதன்போது பயன்­ப­டுத்தப்­பட்­டி­ருக்­க­லா­மெ­னவும் போதை தரக்­கூ­டிய பல வெளி­நாட்டு உயர்­தர மது­பான வகைகள் இங்கு கைப்­பற்­றப்­பட்­ட­தா­கவும் அதி­கா­ரிகள் தெரி­வித்­தனர்.

இரத்­தி­ன­புரி–அவி­சா­வளை வீதி­யி­லுள்ள புவக்­பிட்­டிய பகு­தியின் உல்­லாச விடு­தி­யொன்றில் இடம்­பெற்ற இந்த களி­யாட்ட நிகழ்வின் அநா­க­ரிக செயற்­பா­டு­களால் கோப­ம­டைந்த இப்­பி­ர­தேச கிராம மக்கள் இவ்­வி­ட­யத்தை பாது­காப்பு தரப்­பி­ன­ருக்கு அறி­வித்­த­தை­ய­டுத்து இக்­க­ளி­யாட்ட விடுதி சுற்றி வளைக்­கப்­பட்­டுள்­ளது.

அத்­துடன் இங்கு பயன்படுத்தப்பட்ட அதிக விலையுள்ள உத்தரவு பத்திரம் பெறாது விநியோகிக்கப்பட்ட வெளிநாட்டு மதுபானங்களும் கைப்பற்றப் பட்டுள்ளமை குறிப்பிடத்தக்து.