நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துக்களில் மூவர் உயிரிழப்பு!

24 Sep, 2025 | 09:32 AM
image

நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற வீதி விபத்துகளில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

திஸ்ஸமஹாராம, வென்னப்புவ மற்றும் கற்பிட்டி பொலிஸ் பிரிவுகளில் நேற்று செவ்வாய்க்கிழமை (23) விபத்துகள் பதிவாகியுள்ளதாக பொலிஸார்  தெரிவித்தனர்.

திஸ்ஸமஹாராம பொலிஸ் பிரிவில் பகுதியில், மோட்டார் சைக்கிளி சென்றவர் கட்டுப்பாட்டை இழந்து வீதிக்கு அருகிலுள்ள மின் கம்பத்தில் மோதியுள்ளார். 

இதன்போது, மோட்டார் சைக்கிளை செலுத்தி சென்றவர் பலத்த காயமடைந்து திஸ்ஸமஹாராம  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் பன்னேகமுவ, வீரவில பகுதியைச் சேர்ந்த 28 வயது இளைஞர் என தெரியவந்துள்ளது.

அத்தோடு, வென்னப்புவ பொலிஸ் பிரிவில் கொழும்பு - புத்தளம் பிரதான வீதியில் உள்ள தும்மலதெனிய பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து எதிர் திசையில் விறகு ஏற்றி வந்த லொறியில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் சாரதி பலத்த காயமடைந்து மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் கிழக்கு, தும்மலதெனிய, வென்னப்புவவைச் சேர்ந்த 51 வயதுடைய நபர் என தெரியவந்துள்ளது.

இந்நிலையில், கற்பிட்டி - பலாவி வீதியில் உள்ள சொத்துபிட்டிவாடிய பகுதியில், மோட்டார் சைக்கிள்  மிதி வண்டியுடன் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்தி சென்றவர் மற்றும் மிதி வண்டியைச்  செலுத்தி சென்றவர் பலத்த காயமடைந்து கற்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக புத்தளம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.

இதன்போது  மிதி வண்டி செலுத்தியவர்  உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர்  தலவில, பாலகுடா பகுதியைச் சேர்ந்த 61 வயதுடைய நபர் என தெரியவந்துள்ளது.

மேலும், குறித்த வாகன விபத்துக்கள் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்திய பாதுகாப்பு அமைச்சர் இலங்கை விஜயம்...

2026-09-08 08:32:24
news-image

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கை...

2026-09-07 12:33:54
news-image

இன்றைய வானிலை 

2026-09-08 06:30:43
news-image

பஸ் லலித் வழங்கிய தகவலுக்கமைய ஹங்வெல்ல...

2026-09-08 06:28:10
news-image

இரண்டாம் உலகப் போரின் பின்னர் அண்மையகாலத்தில்...

2026-09-08 06:17:18
news-image

மூதூரில் விசேட தேவையுடைய சிறுவர்களுக்கு சக்கர...

2026-09-08 06:14:40
news-image

22 ஆவது அரசியல் அமைப்புத் திருத்தம்...

2026-09-08 06:03:38
news-image

‘சிரிலிய சவிய’ கணக்கில் ஒரு மில்லியன்...

2026-09-08 05:45:33
news-image

மட்டக்களப்பு ஊழல் மோசடி தொடர்பாக இன்னாள்...

2026-09-08 05:39:50
news-image

எரிமலைச் சாம்பல் காரணமாக ஜகார்தாவுக்கான விமான...

2026-09-08 01:09:31
news-image

இந்துமத அதியுயர் பீடத்தை நியமிக்கவுள்ள  இந்துமாமன்றம்

2026-09-08 01:07:11
news-image

எயார்பஸ் விசாரணை நல்லாட்சி காலத்திலேயே ஆரம்பம்;...

2026-09-08 01:02:52