(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
மின்சாரசபை மறுசீரமைப்பு செய்யும் புதிய சட்டமூலம் தொடர்பில் அரசாங்கம் மின்சாரசபை தொழிற்சங்கங்களுடன் கலந்துரையாடி அதனை தீர்த்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு இல்லாமல் அதனை பாராளுமன்றத்தில் தெரிவித்து பிரயோசனம் இல்லை என எதிர்க்கட்சி உறுப்பினர் சாமரசம்பத் தெரிவித்தார்
பாராளுதமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (23) இடம்பெற்ற தேசிய கட்டிட ஆராச்சி நிறுவகம் சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
இலங்கை மின்சாரசபை மறுசீரமைப்பு செய்யும் சட்டமூலம் பாராளுமன்றத்தில் அனுமதிக்கப்பட்டது. அதனை அடிப்படையாகக்கொண்டு அரசாங்கம் செயற்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மின்சாரசபை தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. அதனால் மின்சார சபையில் மேற்கொள்ளப்போகும் வேலைத்திட்டம் தொடர்பில் அரசாங்கம் எங்களுக்கு தெரிவிக்காமல், அதனை மின்சார சபை தொழிற்சங்கங்களுக்கு விளக்கமளித்து பிரச்சினைக்கு தீர்வுகாண நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடந்த காலங்களில் மின்சார சபையில் மாற்றங்களை மேற்கொள்ள முன்னாள் அமமைச்சர் காஞ்சன விஜேசேகர நடவடிக்கை எடுத்தபோது, அதற்கு கடும் எதிர்பபு தெரிவிக்கப்பட்டது. அதற்கு தற்போது அரசாங்கமும் சம்பந்தப்பட்டிருந்தது. அதனாலே தேர்தலில் மாத்தறையில் காஞ்சன தோல்வியடைந்து, போல்ராஜ் வெற்றிபெற்றார். மின்சார சபையில் சரியான மாற்றத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையிலேயே மாத்தறை மக்கள் இந்த அரசாங்கத்துக்கு வாக்களித்திருக்கிறது. அதனால் தற்போதை அதனை செய்ய வேண்டும்.
2015இல் மின்சார சபையில் மனித ஆளுகை (மேன் பவர்) 6ஆயிரம் பேர் இருந்தனர். நல்லாட்சி அரசாங்கத்தில் இந்த 6ஆயிரம் பேரும் சேவையில் நிரந்தரமாக்கப்பட்டனர். ஆனால் தொழிற்சங்க தலைவராக இருந்த ரன்ஜன் ஜயலால், இவ்வாறு தொழில் நிரந்தரமாக்கப்பட்ட அனைவரிடமிருந்தும் 5ஆயிரம் 10ஆயிரம் என அறிவிட்டுள்ளார். இதனை நான் பொறுப்புடன் தெரிவிக்கிறேன்.
அந்த பணத்தையே தற்போது ஊழியர்கள் அவரிடம் கேட்கின்றனர். அதனால் இந்த அரசாங்கம் கொண்டுவந்து அனுமதித்துக்கொண்ட சட்டத்துக்கு எதிராகவே தற்போது மின்சார சபை தொழிற்சங்கங்கள் பாேராட்டம் செய்து வருகின்றன. இந்த போராட்டத்துக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அரசாங்கம் அது தொடர்பில் தொழிற்சங்கங்களுடன் கலந்துரையாடி தீர்த்துக்கொள்ள வேண்டும் என்றார்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM