தடையற்ற மின் விநியோகத்தை குழப்ப முயற்சித்தால் சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் - தொழிற்சங்கங்களுக்கு அரசாங்கம் எச்சரிக்கை

23 Sep, 2025 | 05:42 PM
image

(எம்.மனோசித்ரா)

பாவனையாளர்களுக்கு தடையற்ற மின்விநியோகத்தை உறுதிப்படுத்த வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும். எனவே தான் மின்சார சேவை அத்தியாவசிய சேவையாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அதனை வீழ்த்தும் வகையில் செயற்படுபவர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் செவ்வாய்கிழமை (23) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

உத்தேச மறுசீரமைப்புக்கள் மேற்கொள்ளப்படாவிட்டால் மின்சக்தி துறை வீழ்ச்சியை தடுக்க முடியாது. எனவே மறுசீரமைப்பை மேற்கொள்ள வேண்டியது அத்தியாவசியமாகும்.

மின்சாரசபை ஊழியர்களை 50 சதவீதத்தால் குறைத்து அதனை முழுமையாக தனியார் மயப்படுத்துவதே கடந்த அரசாங்கத்தின் நோக்கமாகவிருந்தது. ஆனால் நாம் அதனை நான்கு பிரதான அரச நிறுவனங்களாக்கி நவீனமயப்படுத்தவே நடவடிக்கை எடுத்துள்ளோம்.

சட்ட ரீதியாகவே இந்த நிறுவனங்கள் நிறுவப்படவுள்ளன. இதன் போது எந்தவொரு ஊழியர்களையும் சேவையிலிருந்து நீக்குவதற்கு தீர்மானிக்கவில்லை. ஆனால் இவற்றுடன் இணைந்து செயற்பட முடியாது என எண்ணுபவர்கள் நாம் ஏற்கனவே அறிவித்துள்ளமைக்கமைய நஷ்டஈட்டைப் பெற்றுக் கொண்டு சுய விருப்பின் பேரில் சேவையிலிருந்து விலகிக் கொள்ள முடியும்.

தற்போது மின்சார சேவை அத்தியாவசிய சேவையாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. எனவே எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மின் துண்டிப்பிற்கு அரசாங்கம் இடமளிக்காது. மறுசீரமைப்பிற்கு முன்னோக்கிப் பயணிக்க முடியாது. தடையற்ற மின் விநியோகத்தை உறுதிப்படுத்துவது அரசாங்கத்தின் கடமையாகும். அதனை நிறைவேற்றுவதற்காகவே அவை அத்தியாவசிய சேவையாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.

பொருளாதாரத்தை மீண்டும் வீழ்ச்சியடைச் செய்வதற்கு இடமளிக்க நாம் தயாராக இல்லை. அதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்கும் ஒருபோதும் இடமளிக்கப்பட மாட்டாது. அவ்வாறு செயற்படுபவர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும்.

மக்கள் மீது சுமைகளை சுமத்தி இவற்றை நிர்வகித்துச் செல்ல அரசாங்கம் விரும்பவில்லை. மின்சாரசபை சட்ட ரீதியாகவே நிறுவனமயப்படுத்தப்படுகிறது. இவை 100 சதவீதம் அரச நிறுவனங்களாகும். எனவே இதுகுறித்து யாரும் அச்சமடையத் தேவையில்லை என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வடக்கு, வடமத்திய, கிழக்கு மாகாணங்களில் 100...

2025-12-11 01:30:52
news-image

எமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கான பொறுப்புக்கூறல் சர்வதேசத்தின்...

2025-12-11 01:27:01
news-image

கைது செய்யப்பட்டவரை நீண்டகாலம் தடுத்து வைப்பது...

2025-12-11 01:22:45
news-image

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நல்லாசி வேண்டி நாடளாவிய...

2025-12-10 23:51:41
news-image

30 க்கு மேற்பட்ட நீர் இறைக்கும்...

2025-12-10 23:42:06
news-image

ஆசிய அனர்த்த முன்னாயத்த நிலையத்திடமிருந்து இலங்கைக்கு...

2025-12-10 23:40:07
news-image

ஐரோப்பிய ஒன்றியம் 1.8 மில்லியன் யூரோ...

2025-12-10 23:33:34
news-image

திருகோணமலை – மட்டக்களப்பு சாலையில் லொறியும்...

2025-12-10 23:27:28
news-image

கருணை மிகுந்த செயல் பெரும் நம்பிக்கையை...

2025-12-10 19:10:24
news-image

ஊழலற்ற அரச நிர்வாகத்தால் உலக நாடுகள்...

2025-12-10 18:59:59
news-image

இந்திய மீனவர் அத்துமீறல்  வடக்குமாகாண மீனவர்பிரச்சினைகள்...

2025-12-10 21:18:26
news-image

வடக்கு - கிழக்கு மலையகத்துக்கான புகையிரத...

2025-12-10 18:28:06