தேயிலை தொழிலாளர்களுக்கு உரத்தைத் தட்டுப்பாடின்றி வழங்க அரசாங்கம் நடவடிக்கை - அமைச்சர் சமந்த வித்யாரத்ன

23 Sep, 2025 | 05:38 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

தேயிலை பயிர்ச் செய்கையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு தாமதமின்றி  உரிய காலத்தில் தட்டுப்பாடில்லாமல்  உரத்தைப் பெற்றுக் கொடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதுடன் தேயிலை சபை மூலம் அதற்காக 2000 மில்லியன் ரூபா நிதி  ஒதுக்கப்பட்டுள்ளதாக பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (23)  வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் அஜந்த கம்மெத்தகே எம்பி எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

பெருந்தோட்ட கைத்தொழில் துறையில் தேயிலைப் பயிர்ச் செய்கை அண்மைக் காலமாக வீழ்ச்சியடைந்தது. முக்கியமாக உரம் தொடர்பான பிரச்சினையே அதற்கு காரணமாகியது.கடந்த காலங்களில் உரம் இல்லாத காரணத்தினால் முழுமையான விவசாயத் துறையும் பெரும் வீழ்ச்சிக்குள்ளானது. மேற்கொண்ட தீர்மானங்கள் உரத்தை இல்லாமல் செய்ததால் பெரும் நெருக்கடியை எதிர் நோக்க நேர்ந்தது. 

அந்த வகையில் தேயிலைப் பயிர்ச் செய்கையும் வீழ்ச்சியடைந்ததுடன் கடந்த வருடத்தில் அதற்காக நாம் உரம் வழங்கினோம். அதன் போது ஒரு நிறுவனத்தின் மூலம் மட்டுமே உரம் விநியோகிக்கப்படுவதாகவும் உரம் வழங்குவதில் தாமதம் ஏற்படுவதாகவும் மக்கள் மத்தியிலிருந்து பிரச்சினைகள் எழுந்தன. ஏனைய நிறுவனங்களிடமிருந்து உரத்தை பெற்றுக் கொள்வது தொடர்பிலும் சில தரப்பினர் யோசனைகளை முன்வைத்தனர்.

அதனையடுத்து அனைத்து யோசனைகளையும் கவனத்திற் கொண்டு  உரம் விநியோகிப்பதில் புதிய முறைமை ஒன்றை உருவாக்குவதற்காக நாம் அமைச்சரவையின் அனுமதியைப் பெற்றுக் கொண்டோம்.

அத்துடன் தேயிலை சபை மூலம் 2000 மில்லியன் ரூபாவை 2025 ஆம் ஆண்டுக்கான உர நிவாரணத்துக்காக ஒதுக்கியுள்ளோம்.

நாட்டில் நூற்றுக்கு 75 வீதமான தேயிலை, சிறு தேயிலைத் தோட்ட பயிர்ச் செய்கை மூலமாகவே பெற்றுக் கொள்ளப்படுகிறது.  அந்த பயிர்ச்செய்கைகளை இலக்காகக் கொண்டு தேயிலை உரமானியத்தை வழங்குவதற்கு தற்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.  அதனை கிவ் ஆர் கோட் மூலம் பெற்றுக் கொடுப்பதற்கு திட்டமிட்டிருக்கிறோம். 

அரசாங்க உரக் கூட்டுத்தாபனம், உரம் தொடர்பான தேசிய செயலகம் மற்றும் பதிவு செய்யப்பட்டுள்ள பல உர நிறுவனங்கள் மூலம் விவசாயிகள் தாராளமாக உரத்தைப் பெற்றுக் கொடுப்பதற்கு வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்படும். அந்த வகையில் அதற்கான கிவ் ஆர் கோட் வழங்குவதை இந்த மாதம் 26ஆம் திகதி முதற் கட்டமாக களுத்துறை மத்துகம பிரதேசத்தில் ஆரம்பிப்பதற்கும் தீர்மானித்துள்ளோம்.

அதன் மூலம் தேவையான காலத்தில் உரிய முறையில் விவசாயிகளுக்கு உரத்தைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

போதைப்பொருள் குற்றங்களால் சிறைகளில் அதிகரிக்கும் கைதிகள்...

2026-09-07 13:59:34
news-image

பல்கலைக்கழக பணியாளர் ஆட்சேர்ப்பை மாதாந்தம் மீளாய்வு...

2026-09-07 12:16:09
news-image

ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகள் குழுவுக்கும்...

2026-09-07 19:12:32
news-image

எல் நினோவால் கடல்வாழ் பாலூட்டிகளின் உணவுப்...

2026-09-07 19:08:28
news-image

போலி உரிமைப் பத்திரம் மூலம் காணி...

2026-09-07 19:01:04
news-image

22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் அரசாங்கத்தின் எதிர்காலத்தை...

2026-09-07 18:57:01
news-image

விளக்கமறியலில் உள்ள நாமல் ராஜபக்சவுக்கு நாடாளுமன்றம்...

2026-09-07 18:30:59
news-image

குருநாகலில் அரிய கடல்வாழ் உயிரின ஓடுகளை...

2026-09-07 17:40:40
news-image

'கொஸ் மல்லி'யின் மைத்துனரான 'பூத களுவா'...

2026-09-07 17:39:52
news-image

சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் சில கருத்துகள்...

2026-09-07 17:38:14
news-image

பெண்கள், சிறுவர் பாதுகாப்பு குறித்து ஐ.நா....

2026-09-07 17:17:59
news-image

அம்பிட்டிய சுமண ரத்ன தேரருக்கு விளக்கமறியல்

2026-09-07 17:36:25