தொழிற்சங்கங்களை அடக்க அரசு முயற்சித்தால் விளைவுகள் பாரதூரமானதாக இருக்கும் - நாமல் ராஜபக்ஷ எச்சரிக்கை

Published By: Digital Desk 7

23 Sep, 2025 | 05:37 PM
image

( எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

தொழிற்சங்கத்தினரை பலவந்தமான அடக்க முயற்சித்தால் அதன் விளைவு பாரதூரமானதாக அமையும் என்பதை அரசாங்கம் விளங்கிக் கொள்ள வேண்டும் 1889 மற்றும் 1988 ஆம் ஆண்டு காலங்களில் செயற்பட்டதை போன்று தற்போது செயற்பட முடியாது. ஜனாதிபதியின் ஒருவருட ஆட்சியில் நாட்டின் தேசிய விவசாயம் மற்றும் தேசிய உற்பத்தி துறை வீழ்ச்சியடைந்துள்ளது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின்  பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (23) நடைபெற்ற  தேசியக் கட்டிட ஆராய்ச்சி நிறுவகம் சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில்  மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் கடந்துள்ளது. இனியும் கடந்த கால அரசாங்கங்களை விமர்சித்துக் கொண்டிக்க முடியாது.ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் பல வாக்குறுதிகளை மக்களுக்கு வழங்கினீர்கள்.இந்த வாக்குறுதிகள்  நிறைவேற்றப்பட்டுள்ளதா, மக்கள் பயனடைந்துள்ளார்களா ?

ஜனாதிபதியின் ஒருவருட ஆட்சியில் நாட்டின் விவசாயம்இ கடற்றொழில்  ஆகிய துறைகளின் வளர்ச்சி பின்னடைந்துள்ளது. அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்து மக்களுக்கு உணவளிக்கலாம் என்ற நிலைப்பாட்டில் இருந்துக்கொண்டு அரசாங்கம் செயற்படுகிறது. தேசிய உற்பத்திகளை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் விசேட கவனம் செலுத்த வேண்டும்.

இலங்கை மின்சார சபை ஊழியர்கள்இ அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்  இன்று போராட்டத்தில் ஈடுகிறார்கள்.கடந்த அரசாங்கம் இயற்றிய மின்சார சபை சட்டத்தை இரத்துச் செய்வதாக மின்சார  சேவையாளர்களுக்கு வாக்குறுதிளித்தீர்கள்.அவர்களும் உங்களுக்கு ஆதரவளித்தார்கள்.ஆனால் இன்று  அந்த சட்டத்தில் குறிப்பிடப்பட்ட விடயங்களையே செயற்படுத்த முனைகின்றீர்கள்.

தொழிற்சங்கத்தினரை பலவந்தமான அடக்க முயற்சித்தால் அதன் விளைவு பாரதூரமானதாக அமையும் என்பதை அரசாங்கம் விளங்கிக் கொள்ள வேண்டும் 1889 மற்றும் 1988 ஆம் ஆண்டு காலங்களில் செயற்பட்டதை போன்று தற்போது செயற்பட முடியாது. காலம் மாறிட்டது. என்பதை  ஏற்றுக்கொள்ளுங்கள். எதிர்க்கட்சிகள் மாற வேண்டும் என்று குறிப்பிடுவதற்கு முன்னர் அரசாங்கம் மாற வேண்டும் .

அழகான நாடு செழிப்பான  வாழ்க்கை என்று குறிப்பிட்டுக் கொண்டே அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது.இந்த ஒருவருட காலத்தில் மக்கள் செழிப்பாகவில்லை. ஆனால் 159 உறுப்பினர்கள் மாத்திரம் செழிப்பாக உள்ளார்கள்.  ஆண்டுகாலத்தை சாபம் என்று விமர்சித்தவர்கள். 75 ஆண்டுகாலத்தில் செல்வந்தர்களாகியுள்ளமை கேள்விக்குறியாகியுள்ளது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

டிஜிட்டல் நிர்வாக, ஊழல் ஒழிப்பு நடவடிக்கை...

2026-07-22 18:14:00
news-image

ஜப்பான் அரசின் கடன் உதவித் திட்டத்தின்...

2026-07-22 12:54:12
news-image

இலங்கை பட்டய ஊடகவியலாளர் நிறுவனத்தை உருவாக்கும்...

2026-07-22 17:34:35
news-image

காய்ச்சல் ஏற்பட்டால் காலம் தாமதிக்காமல் உடனடியாக...

2026-07-22 14:18:56
news-image

ஜனாதிபதி மாளிகைகளை பயனுள்ள முறையில் பயன்படுத்த...

2026-07-22 14:50:18
news-image

ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை...

2026-07-22 14:49:18
news-image

புதுப்பிக்கத்தக்க மின்சாரக் கட்டண நிர்ணயத்துக்கான மக்கள்...

2026-07-22 14:52:16
news-image

புகையிரத சேவையை நவீனமயமாக்க 2027–2029 அபிவிருத்தித்...

2026-07-22 23:07:26
news-image

வடிகாண்களை மக்கள் அபகரித்து தடைகளை ஏற்படுத்துவதால்...

2026-07-22 15:49:49
news-image

பகிடிவதையால் ஒருவர் உயிரிழப்பு, 106 பேர்...

2026-07-22 14:52:40
news-image

நீதிமன்ற உத்தரவுக்கு அமைய அரசியல் கைதிகள்...

2026-07-22 16:01:58
news-image

சஜித் - ரணில் பங்கேற்புடன் நாளை...

2026-07-22 16:02:17