இலங்கை மின்சார சபையை தனியார் மயப்படுத்தும் நோக்கம் அரசாங்கத்துக்கு கிடையாது - அநுர கருணாதிலக

23 Sep, 2025 | 05:10 PM
image

( எம்.ஆர்.எம்.வசீம் ,இராஜதுரை ஹஷான்)

இலங்கை மின்சார சபையை தனியார் மயப்படுத்தும் நோக்கம் அரசாங்கத்துக்கு கிடையாது, மின்சார சபையின் கட்டமைப்புக்கள் அரச நிறுவனங்களுக்கே வழங்கப்படும். மின்சார சங்கத்தினர் முன்வைத்துள்ள ஒருசில கோரிக்கைகள் நியாயமற்றவை அவற்றை ஏற்க முடியாது என்று  நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர்  அநுர   கருணாதிலக தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (23) நடைபெற்ற  தேசியக் கட்டிட ஆராய்ச்சி நிறுவகம் சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில்  மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

கடந்த கால ஆட்சியாளர்கள்  தமது நலுக்காகவே ஒருசில சட்டங்களை இயற்றிக்கொண்டார்கள்.இந்த சட்டங்களால் மக்கள் பாதிக்கப்பட்டார்கள இவ்வாறான சட்டங்களை நிச்சயம் இரத்துச் செய்வோம். மக்களுக்கு பயனுடையதான சட்டங்களை இயற்றுவோம்.

இலங்கை மின்சார சபை சேவையாளர்களின்    தொழிற்சங்க போராட்டம் பற்றி மாறுப்பட்ட பல கருத்துக்கள்  குறிப்பிடப்படுகின்றன.த   கடந்த அரசாங்கம் இலங்கை மின்சார சபையை  12 பகுதிகளாக கூறுப்படுத்தி  ஊழியர்களை    சேவையில் இருந்து  விலக்குவதற்கான வழிமுறைகளை உள்ளடக்கிய வகையில் சட்டத்தை  இயற்றியது.  நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் இந்த சட்டத்தை திருத்தம் செய்தோம்.

இலங்கை  மின்சார சபையில் பல பிரச்சினைகள் காணப்படுகிறது என்பதை  ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக வே  மின்சார சபையை   மறுசீரமைக்க தீர்மானிக்கப்பட்டது. மின்சார சபையின்  கட்டமைப்பை நான்கு  நிறுவனங்களுக்கு வழங்க  தீர்மானிக்கப்பட்டுள்ளது.இந்த நான்கு நிறுவனங்களும்  முழுமையாக அரசுக்கு சொந்தமானது.

இலங்கை மின்சார சபையை தனியார் மயப்படுத்தும் நோக்கம் அரசாங்கத்துக்கு கிடையாது மின்சார சபையின் கட்டமைப்புக்கள் அரச நிறுவனங்களுக்கே வழங்கப்படும். மின்சார சங்கத்தினர் முன்வைத்துள்ள ஒருசில கோரிக்கைகள் நியாயமற்றவை அவற்றை ஏற்க முடியாது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இனவாத முரண்பாடுகளால் சிதைவடைந்த மனங்களை ஆற்றுப்படுத்துவதற்கு...

2026-02-17 17:04:38
news-image

பாராளுமன்ற செயலாளர் நாயகத்தையும் பதவி நீக்கம்...

2026-02-17 19:55:24
news-image

நீதிக்கான காத்திருப்பும் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது ; மனித...

2026-02-17 19:55:04
news-image

சிறந்த அரசியல் கலாசாரத்தை உருவாக்க புதிய...

2026-02-17 17:19:21
news-image

சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர்...

2026-02-17 20:12:55
news-image

நமது நாட்டின் சட்ட ஆட்சி அச்சுறுத்தலுக்கு...

2026-02-17 17:18:54
news-image

இலகு ரயில் போக்குவரத்து திட்டத்துக்கு ஜைகா...

2026-02-17 18:31:47
news-image

பாடசாலைக் கட்டடங்களில் அவசர கால வெளியேற்றப்...

2026-02-17 18:28:00
news-image

பாராளுமன்ற உறுப்பினர்கள் ஓய்வூதியம் நீக்கம்: சட்டமூலம்...

2026-02-17 18:07:20
news-image

IMF முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா...

2026-02-17 18:17:29
news-image

இலங்கையின் மீளக் கட்டியெழுப்பும் திட்டம் மீதான...

2026-02-17 18:02:09
news-image

ரயில் சாரதிகள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடத் தீர்மானம்

2026-02-17 17:44:02