அருண் ஜயசேகரவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை ; காரணங்களை சமர்ப்பிக்குமாறு சஜித் கோரிக்கை

23 Sep, 2025 | 05:07 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகரவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை நிராகரிப்பதற்கு ஏதுவாக அமைந்த காரணங்களை சபைக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தார்.

பாராளுமன்றத்தில்  செவ்வாய்க்கிழமை (23)  விசேட கூற்றொன்றை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இதுதொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

அருண ஜயசேகர பிரதி அமைச்சர் தொடர்பில் எமக்கு தனிப்பட்ட எந்தப் பிரச்சினைகளும் இல்லை. அவர் தற்போது பதில் பாதுகாப்பு அமைச்சராக பதவி வகித்து வருகிறார்.

அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானமொன்றைக் கொண்டு வந்ததன் பிற்பாடு, அதனை நிராகரிப்பதற்கு அடிப்படையாக இருந்த செயலாளர்கள் குழாமின் அறிக்கைகள் மற்றும் சட்டமா அதிபரின் அறிக்கை உள்ளிட்ட ஏனைய விடயங்களை இந்த சபைக்கு சமர்ப்பிக்குமாறு  சபாநாயகரை கேட்டுக்கொள்கிறேன், 

அவ்வாறே, பாதிக்கப்பட்டவர்கள் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் நீதியான விசாரணையை வேண்டி நின்றாலும், அது அவ்வாறு நடக்காமையினால், ஜெனீவாவில் தற்போது நடந்து வரும் கலந்துரையாடலில், உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் சங்கிரில்லா ஹோட்டலில் உயிரிழந்த விஹன தேஜானின் தந்தை சுராஜ் நிலங்க, நிகழ்நிலை தொழில்நுட்பம் மூலம் இணைந்து கொண்டு, இலங்கையில் நடந்து வரும் உயிரித்த ஞாயிறு விசாரணை தொடர்பில் திருப்தியடைய முடியாது என்று தெரிவித்துள்ளார். 

இதுபோன்ற விடயங்கள் நாட்டிற்கு நல்லதில்லை என்பதால், இங்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதி நிலை நாட்டப்படுவதை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு எங்களுக்கு இருக்கிறது. அதனை அரசாங்கம் செய்ய வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாமலை கைது செய்து பொதுஜன பெரமுனவுக்கு...

2026-09-09 16:44:54
news-image

சர்வதேச அமைப்புகளை அவமதிப்பது புரிதலின்மையை வெளிப்படுத்துகிறது;...

2026-09-09 16:45:30
news-image

சத்துருக்கொண்டான், வந்தாறுமூலை படுகொலைகள் : சுயாதீன...

2026-09-09 19:48:51
news-image

இத்தாலிய கடற்படைக்குச் சொந்தமான ‘ITS GIUSEPPE...

2026-09-09 20:38:55
news-image

முச்சக்கரவண்டியை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு...

2026-09-09 20:34:08
news-image

வாகன இலக்கத் தகடு தட்டுப்பாட்டுக்கு 6...

2026-09-09 16:01:03
news-image

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இந்திய...

2026-09-09 19:59:59
news-image

எல் நினோ தாக்கத்தால் நாட்டில் 8...

2026-09-09 19:41:21
news-image

இலங்கை மலையக இந்து குருமார்களுக்கும் ஜனாதிபதியின்...

2026-09-09 19:40:19
news-image

பம்பலப்பிட்டி முதல் தெஹிவளை வரையிலான சட்டவிரோத...

2026-09-09 19:26:29
news-image

நேபாள வெள்ளப்பெருக்கு : மீட்புப் பணிகளுக்காக...

2026-09-09 18:18:38
news-image

தென்னேகும்புறையில் கடைகளை அகற்றச் சென்ற அதிகாரிகளுக்கு...

2026-09-09 19:45:33