3 இலட்சம் மெற்றிக் தொன் சோளம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டது முற்றிலும் பொய்! - நாமல் கருணாரத்ன

23 Sep, 2025 | 04:30 PM
image

( எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

3 இலட்சம் மெற்றிக் தொன் சோளம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டது முற்றிலும் பொய்யானது. இந்த ஆண்டு 67 ஆயிரம் மெற்றிக் தொன் சோளம் இறக்குமதி செய்யப்பட்டு, தேசிய மட்டத்தில் சோள உற்பத்தியை அதிகரிப்பதற்கு உரிய நடவடிக்கைகள் செயற்படுத்தப்பட்டுள்ளன என்று விவசாயத்துறை பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (23) நடைபெற்ற அமர்வின் போது எதிர்க்கட்சித் தலைவர் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

எதிர்க்கட்சித் தலைவரின் குற்றச்சாட்டுக்களையிட்டு கவலையடைகிறேன்.அவர் தெரிந்து இவ்வாறு குறிப்பிடுகிறாரா அல்லது தெரியாமல் குறிப்பிடுகிறாரா என்பதை அறிய முடியவில்லை. தேசிய மட்டத்தில் விவசாயத்துறையை மேம்படுத்துவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இந்த ஆண்டு 3 இலட்சம் மெற்றிக்தொன் சோளம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிடுவது முற்றிலும் பொய்யானது. கடந்த ஆண்டு முதற்காலப்பகுதியில் 2 இலட்சத்து 53 ஆயிரம் மெற்றிக்தொன் சோளம் இறக்குமதி செய்யப்பட்டது.இந்த ஆண்டு 67 ஆயிரம் மெற்றிக்தொன் சோளம் இறக்குமதி செய்யப்பட்டு தேசிய மட்டத்தில் சோள உற்பத்திகளை மேம்படுத்த உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

 சோளம் உட்பட அரிசி உற்பத்தியை அதிகரிப்பதற்கு விவசாயிகளுக்கு உரிய வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. எதிர்வரும் மாதமளவில் 13 புதிய பயரினங்களை அறிமுகப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வெவ்வேறான இடங்களில் இரு வீதி விபத்துக்கள்:...

2026-08-08 17:53:59
news-image

ஆக்கிரமிக்கப்பட்ட வீதியை வைத்து தெற்கில் குழப்பம்...

2026-08-08 17:26:46
news-image

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டுச் சிகரெட்டுகளுடன்...

2026-08-08 17:21:58
news-image

அரசியல் கைதிகளின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துங்கள் -...

2026-08-08 17:10:55
news-image

இலங்கையர்களை இலக்கு வைத்து இணையவழிப் பண...

2026-08-08 17:08:46
news-image

இந்திய மீனவர்களின் ஊடுருவல் தென்பகுதி வரை...

2026-08-08 17:08:36
news-image

தூய்மையான இலங்கைக்கான மக்கள் பணி" -...

2026-08-08 16:46:57
news-image

இலங்கைக்குக் கடத்த முயன்ற 297 கிலோ...

2026-08-08 16:52:24
news-image

பொகவந்தலாவையில் சட்டவிரோதமாக இரத்தினக்கல் அகழ்வில் ஈடுபட்ட...

2026-08-08 16:47:17
news-image

செம்மணி மனிதப் புதைகுழி: மூன்றாம் கட்ட...

2026-08-08 16:46:20
news-image

அல்லைப்பிட்டிச் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் குறித்து...

2026-08-08 16:39:43
news-image

விடுதலை செய்யப்பட்டதாக கூறப்படும் இரண்டு தமிழ்...

2026-08-08 16:22:27