குவைத் நாட்டுக்கு வேலை வாய்ப்பைப் பெற்றுச் சென்று, அங்கு பல்வேறு துன்புறுத்தல்களுக்கும் இலக்கான 26 பெண்கள் நாடு திரும்பியுள்ளனர்.  நேற்றுக்காலை 6.20 மணியளவில் இவர்கள் நாட்டை வந்தடைந்ததாக, வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் குறிப்பிட்டுள்ளது. 

இவர்கள் வவுனியா, யாழ்ப்பாணம், திருகோணமலை, அம்பாறை, குருநாகல், அனுராதபுரம் மற்றும் கண்டி ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது.