(நெவில் அன்தனி)
ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்றுவரும் ரி20 ஆசிய கிண்ண கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் இலங்கை இக்கட்டான நிலையில் இருக்கிறது.
எட்டு நாடுகளுக்கு இடையில் இரண்டு குழுக்களில் நடைபெற்ற லீக் சுற்று முடிவில் தோல்வி அடையாத அணியாக சுப்பர் 4 சுற்றை நம்பிக்கையுடன் எதிர்கொண்ட இலங்கை, ஆரம்பப் போட்டியில் பங்களாதேஷிடம் தோல்வி அடைந்தது.
இதன் காரணமாக ஆசிய கிண்ண கிரிக்கெட்டில் இலங்கை நிலைத்திருக்குமா அல்லது சுப்பர் 4 சுற்றுடன் வெளியேறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இத்தகைய சூழ்நிலையில், அபுதாபி ஸய்யத் கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று இரவு நடைபெறவுள்ள தனது இரண்டாவது சுப்பர் 4 போட்டியில் பாகிஸ்தானை இலங்கை எதிர்த்தாடவுள்ளது.
இப் போட்டி இலங்கைக்கு 'செய் அல்லது செத்துமடி' என்ற கடும் சோதனையை ஏற்படுத்துவதாக அமையவுள்ளது.
இலங்கையைப் போன்ற நிலையையே பாகிஸ்தானும் எதிர்கொண்டுள்ளது.
இந்தியாவுக்கு எதிரான சுப்பர் 4 போட்டியில் தோல்வி அடைந்ததால் எஞ்சிய இரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற வேண்டிய கட்டாய நிலையில் பாகிஸ்தான் இருக்கிறது.
இலங்கை அணி இறுதிப் போட்டியில் விளையாடும் தகுதியைப் பெறுவதாக இருந்தால் இன்று நடைபெறவுள்ள பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியிலும் தொடர்ந்து வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள இந்தியாவுக்கு எதிரான போட்டியிலும் வெற்றிபெற்றே ஆக வேண்டும்.
இதன் காரணமாக பந்துவீச்சைப் பலப்படுத்தும் நோக்கத்துடன் இலங்கை அணியில் ஒரு மாற்றம் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆகிய கிண்ண முதல் சுற்றில் ஹொங்கொங்கிற்கு எதிரான போட்டியில் மாத்திரம் விளையாடிய சுழல்பந்துவீச்சாளர் மஹீஷ் தீக்ஷ்னவுக்கு இன்றைய போட்டியில் விளையாட வாய்ப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அவருக்குப் பதிலாக யாரை நிறுத்தவது என அணி முகாமைத்துவத்தினர் ஆலோசித்து வருகின்றனர்.
காமில் மிஷார, துனித் வெல்லாலகே ஆகிய இருவரில் ஒருவரை நீக்கிவிட்டு மஹீஷ் தீக்ஷனவுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது இவ்வாறிருக்க, இந்த சுற்றுப் போட்டியில் பாகிஸ்தான் அணியினர் சில கசப்புணர்களை எதிர்கொள்ள நேரிட்டுள்ளதை அவதானிக்கக்கூடியதாக இருந்தது.
ஏ குழுவுக்கான லீக் போட்டி முடிவில் பாகிஸ்தான் வீரர்களுடன் இந்திய வீரர்கள் கைகுலுக்க மறுத்ததால் பாகிஸ்தான் வீரர்கள் சஞ்சலம் அடைந்ததைக் காணக்கூடியதாக இருந்தது.
அத்துடன் போட்டி தீர்ப்பாளர் அண்டி பைக்ரொவ்ட், கள மத்தியஸ்தர் ருச்சிர பல்லியகுரு ஆகியோரின் தீர்ப்புகள் குறித்து பாகிஸ்தான் கடும் ஆட்சேபத்தை வெளிப்படுத்தியிருந்தது.
அது மட்டுமல்லாமல் அபுதாபியில் நடைபெற்ற போட்டிக்கு ஒரு மணித்தியாலம் தாமதித்தே பாகிஸ்தான் அணியினர் மைதானத்தை சென்றடைந்தனர்.
ஒரு கட்டத்தில் போட்டியிலிருந்து விலகப்போவதாகவும் பாகிஸ்தான் எச்சரித்தது. எனினும் அபராதம் மற்றும் தடைகளை பாகிஸ்தான் எதிர்கொள்ள நேரிடும் என விடுக்கப்பட்ட எச்சரிக்கையை அடுத்து பாகிஸ்தான் தொடர்ந்து விளையாடி வருகிறது. சுப்பர் 4 போட்டி முடிவிலும் பாகிஸ்தான் வீரர்களுக்கு இந்திய வீரர்கள் புறமுதுகு காட்டியிருந்தனர்.
இத்தகைய நெருக்கடிகளுக்கு மத்தியிலும் எதிர்நீச்சல் போடக்கூடிய அணியாக பாகிஸ்தான் காணப்படுகிறது. இதன் காரணமாக இலங்கை அணி அழுத்தத்தை எதிர்கொள்ள நேரிடலாம்.
இலங்கையும் பாகிஸ்தானும் நேருக்கு நேர் விளையாடிய கடைசி ஐந்து சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகளிலும் இலங்கை வெற்றியீட்டி இருப்பதால் இன்றைய போட்டியிலும் வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எவ்வாறாயினும், வெற்றியை விட நிகர ஓட்ட வேகமும் முக்கியம் என்பதால் இன்றைய போட்டி இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் தீர்மானம் மிக்க போட்டியாக அமையும் என்பது உறுதி.
அணிகள்
இலங்கை: பெத்தும் நிஸ்ஸன்க, குசல் மெண்டிஸ், காமில் மிஷார, குசல் ஜனித் பெரேரா, சரித் அசலன்க (தலைவர்), தசுன் ஷானக்க, கமிந்து மெண்டிஸ், வனிந்து ஹசரங்க, துனித் வேல்லாலகே அல்லது மஹீஷ் தீக்ஷன, துஷ்மன்த சமீர, நுவன் துஷார.
பாகிஸ்தான்: ஷாஹிப்ஸதா பர்ஹான், பக்கார் ஸமான், சய்ம் அயூப், ஹுசெய்ன் தலாத், மொஹம்மத் நவாஸ், சல்மான் அகா (தலைவர்), பாஹிம் அஷ்ரப், மொஹம்மத் ஹரிஸ், ஷஹீன் ஷா அப்ரிடி, ஹரிஸ் ரவூப், அப்ரார் அஹ்மத்.














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM