நாங்கள் சமர்ப்பித்த நம்பிக்கையில்லா பிரேரணை சரியானது என்பதை தற்போதாவது ஏற்றுக்கொள்வீர்களா ? ; கயந்த கேள்வி

23 Sep, 2025 | 01:41 PM
image

 ( எம்.ஆர்.எம்.வசீம் ,இராஜதுரை ஹஷான்)

பிரதி அமைச்சர்களுக்கு விடயதானத்தின் ஊடாக அதிகாரம் மற்றும் தத்துவங்கள் அளிக்கப்படவில்லை என்று குறிப்பிட்டு அருண  ஜயசேகரவுக்கு   எதிரான  நம்பிக்கையில்லா பிரேரணையை புறக்கணித்தீர்கள் ஆனால் இவர் தற்போது பாதுகாப்பு பதில் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆகவே நாங்கள் சமர்ப்பித்த நம்பிக்கையில்லா பிரேரணை சரியானது என்பதை தற்போதாவது  ஏற்றுக்கொள்வீர்களா?  என்று  எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவான கயந்த கருணாதிலக  கேள்வியெழுப்பினார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (23) நடைபெற்ற அமர்வின் போது விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உத்தியோகபூர்வ அரசமுறை விஜயத்தை மேற்கொண்டு வெளிநாட்டுக்குச் சென்றுள்ளார். ஜனாதிபதி வசமுள்ள மூன்று அமைச்சுகளுக்கு பதில் அமைச்சர்கள்  நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கை வெளியிட்டுள்ளது.

பொருள்கோடல் கட்டளைச் சட்டத்தின்  2(அ) பிரிவில் 'அமைச்சர் ஒருவர் அரசாங்கத்தின் ஏதேனும் கடமை அல்லது கருமத்தை ஆற்றும் போது  அவருக்கு ஜனாதிபதியால் அந்த அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன என்று கருதப்படும். முறையாக வகையில் குறித்த நபர் நியமிக்கப்பட்டுள்ளார் என்று கருதப்படும்'  என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் வெளிநாட்டு விஜயத்தை தொடர்ந்து பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர பதில் பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். 

அருண ஜயசேகரவுக்கு எதிராக நாங்கள் நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வந்த போது  பிரதி அமைச்சர்களுக்கு விடயதானத்தின் ஊடாக அதிகாரம் மற்றும் தத்துவங்கள் அளிக்கப்படவில்லை என்று குறிப்பிட்டு  நீங்கள் (சபாநாயகர்) நம்பிக்கையில்லா பிரேரணையை புறக்கணித்தீர்கள்.

தனிப்பட்ட காரணிகளை அடிப்படையாகக் கொண்டு  பாதுகாப்பு பிரதி அமைச்சருக்கு எதிராக நாங்கள் நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வரவில்லை.

உண்மை நோக்கத்துடனே செயற்பட்டோம். இந்த நம்பிக்கையில்லா பிரேரணை சரியானது என்பதை தற்போதாவது ஏற்றுக்கொள்வீர்களா என்று கேள்வியெழுப்பினார்.

இதற்கு சபைக்கு தலைமை தாங்கிய சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன, இவ்விடயம் குறித்து நான் கடந்த பாராளுமன்ற அலுவல்கள் கூட்டத்தின் பின்னர் உங்களுக்கு தெளிவுப்படுத்தினேன். எதிர்வரும் நாட்களில் பேசலாம். இவ்விடயம் குறித்து விரிவாக தெளிவுப்படுத்த வேண்டியுள்ளது என்றார்.

இதனைத் தொடர்ந்து எழுந்து உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேதமாச  பிரதி அமைச்சர் அருண ஜயசேகர மீது எமக்கு தனிப்பிட்ட பிரச்சினைகள் ஏதுமில்லை. பதில் பாதுகாப்பு அமைச்சராக இன்று (நேற்று) நியமிக்கப்பட்டுள்ளார்.

நம்பிக்கையில்லா பிரேரணையை  புறக்கணிப்பதற்கு அடிப்படையாக அமைந்த விடயங்களை சபையில் வெளிப்படுத்துங்கள். உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் நீதி மற்றும் நியாயத்தை கோருகிறார்கள்.

சங்ரில்லா ஹோட்டலில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் உயிரிழந்த  வியங்க தேஜான்  என்ற இளைஞனின் தந்தை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் நிகழ்நிலை முறைமை ஊடாக கலந்துக்கொண்டு தமக்கு நீதி கிடைக்கவில்லை. குண்டுத்தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் குறித்து தாம் திருப்தியடையவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். 

இது நாட்டுக்கு நல்லதல்ல, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டுமாயின்  விசாரணைகள் முறையாக இடம்பெற வேண்டும். மக்கள் நம்பிக்கை பெற வேண்டும். நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து  சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் பாராளுமன்ற செயலாளர் காரியாலயம் வழங்கிய அறிக்கையை சபைக்கு சமர்ப்பியுங்கள் என்று  வலியுறுத்தினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

விடுதலை செய்யப்பட்டதாக கூறப்படும் இரண்டு தமிழ்...

2026-08-08 16:22:27
news-image

மாணவர்கள் தமது இலக்கை நோக்கி பயணிக்க...

2026-08-08 15:22:13
news-image

உயர்நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீடிப்பது...

2026-08-08 14:56:36
news-image

இரத்மலானையில் ஆயுதங்கள், கைக்குண்டு மற்றும் பணத்துடன்...

2026-08-08 14:36:20
news-image

பதுளையில் புதையல் தோண்டி எடுக்கும் நோக்கில்...

2026-08-08 13:20:57
news-image

உயர்தர பரீட்சார்த்திகள் பொறுப்புடன் செயற்பட வேண்டும்...

2026-08-08 13:56:21
news-image

இலங்கை தபால்துறையை நவீனமயப்படுத்துதல் குறித்த கலந்துரையாடல்

2026-08-08 13:51:43
news-image

கட்டானையில் 75 லீற்றர் சட்டவிரோத மதுபானத்துடன்...

2026-08-08 13:20:07
news-image

கிளிநொச்சி திருவையாறுப் பகுதியில் நான்கு ஏக்கர்...

2026-08-08 13:47:48
news-image

கடல் கொந்தளிப்பு எச்சரிக்கை: மீனவ சமூகத்திற்கு...

2026-08-08 13:13:25
news-image

நாடு தழுவிய சோதனைகளில் 431 தரமற்ற...

2026-08-08 13:05:24
news-image

தொம்பகஹவெல - பஹதராவ குளத்தில் நீராடச்...

2026-08-08 12:48:03