தங்காலை பகுதியில் 600 கிலோ போதைப்பொருட்கள், துப்பாக்கிகளும் மீட்பு; சந்தேகத்துக்கிடமாக மூவர் மரணம் - ஆனந்த விஜேபால

Published By: Vishnu

23 Sep, 2025 | 02:47 AM
image

(எம்.மனோசித்ரா)

தங்காலை சீனிமோதர மற்றும் அதனை அண்மித்த பிரதேசங்களில் பொலிஸார் முன்னெடுத்த சுற்றி வளைப்புக்களில் ஐஸ் மற்றும் ஹெரோயின் உள்ளிட்ட சுமார் 600 கிலோ கிராம் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. திங்கட்கிழமை (22) முன்னெடுக்கப்பட்ட இந்த சுற்றி வளைப்புக்களின் போது துப்பாக்கிகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கடந்த இரு தசாப்தங்களாக நாட்டில் போதைப்பொருளுடன் தொடர்புடைய மற்றும் திட்டமிட்ட குற்றச் செயல்கள் அதிகரித்துச் செல்லும் போக்கே காணப்படுகிறது. இவற்றுடன் நேரடியாக அரசியல் ரீதியான தொடர்புகள் காணப்பட்டன என்பது அனைவரும் அறிந்த காரணியாகும். எனினும் இது மேலும் நீடிப்பதை தடுப்பதற்கு அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.

அதன் பிரதிபலனாக இந்த நடவடிக்கைகளை குறிப்பிட்ட மட்டத்தில் கட்டுப்படுத்தக் கூடியதாகவுள்ளது. குறிப்பாக வெளிநாடுகளில் தலைமறைவாக இருந்த பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். அவர்களிடம் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளில் பல்வேறு தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டு வருகின்றன. இவற்றுடன் தொடர்புடைய புலனாய்வு தகவல்கள் தொடர்ச்சியாக கிடைக்கப் பெறுகின்றன.

அதற்கமைய தென் மாகாணத்தை அடிப்படையாகக் கொண்டு நேற்று முன்னெடுக்கப்பட்ட சுற்றி வளைப்புக்களில் சுமார் 600 கிலோ கிராம் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. ஹெரோயின் போதைப் பொருள் அடங்கிய 245 பக்கட்டுக்களும், ஐஸ் போதைப் பொருள் அடங்கிய 390 பக்கட்டுக்களும் இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளன. இது குறித்த மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

தங்காலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இல 43 கொடம்ப, கஹாவத்துரகொட சீனிமோதர, நாகொழுகம என்ற முகவரியில் வசிக்கும் இருவர் சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிழந்துள்ளதாக கிடைக்கப் பெற்ற தகவல்களுக்கமைய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. அதற்கமைய குறித்த பகுதியிலிருந்த சிறிய லொறியொன்றிலிருந்து 10 கிலோ கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த நபர்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட இடத்திலிருந்த பிரிதொரு நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கிடைத்தன. தினுக லக்ஷான் ஹேவாவிதாரன மற்றும் விக்ரம எதிரிசூரிய கவிந்து ஆகியோரே இவ்வாறு சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிழந்துள்ளனர். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்த நபர் வெநுர குமார என்பவராவார். இந்த மரணங்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இவர்கள் தவிர அதே இடத்திலிருந்த பிரிதொரு நபர் தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. தப்பிச் சென்றவர் தொடர்பிலும் தங்காலை பொலிஸாரால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

ஆரம்பகட்ட விசாரணைகளுக்கமைய குறித்த இடத்திலிருந்து சுமார் ஒரு கிலோ மீற்றர் தூரத்தில் தங்காலை  பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் நிறுத்தப்பட்டிருந்த லொறியொன்றிலிருந்து துப்பாக்கிகள் மற்றும் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இது தொடர்பில் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன் போது கண்டுபிடிக்கப்பட்ட போதைப்பொருள் தொகையில் 100 பக்கட்டுக்களில் 100 கிலோ கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் 80 பக்கட்டுக்களில் 100 கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருளும் குறித்த லொஹியிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. மேலும் டி 56 ரக துப்பாக்கி, 5 ரிவோல்வர் ரக துப்பாக்கிகள் என்பனவும் மீட்க்கப்பட்டுள்ளன. போதைப்பொருள் தொடர்பில் பொது மக்களுக்கு ஏதேனும் தகவல்கள் கிடைக்கப் பெற்றால் அவற்றை பொலிஸாருக்கு அறிவிக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈ.பி.எப்., ஈ.ரீ.எப். இணைப்புக்கு எதிர்ப்பு; தொழிற்சங்கங்கள்...

2026-07-17 14:34:16
news-image

நீர்கொழும்பு சிறைச்சாலை மரணங்கள் : வழக்கு...

2026-07-17 16:18:43
news-image

புகைப்பிடிப்பதால் தினமும் 50 உயிரிழப்புகள்; ஆண்டுக்கு...

2026-07-17 16:19:13
news-image

எரிபொருள் விலையில் பாரியதொரு மாற்றம் ஏற்படாது...

2026-07-17 16:19:41
news-image

போதைப்பொருளுக்கு எதிராக கடுமையான சட்டங்கள் இயற்றப்படும்...

2026-07-17 16:20:09
news-image

மண்ணெண்ணெயில் இயங்கிய 100 பஸ்கள் அடையாளம்;...

2026-07-17 22:26:04
news-image

அதிசிறப்புத் தரத்துக்குத் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான பதவியுயர்வு...

2026-07-17 22:20:42
news-image

ஜனாதிபதி மற்றும் சிறைச்சாலைத் திணைக்கள அதிகாரிகளுக்கு...

2026-07-17 22:08:58
news-image

தொழிற்கல்வியை வலுப்படுத்த 2027 வரவுசெலவுத் திட்டத்தில்...

2026-07-17 22:06:56
news-image

நேர்மையாக இருந்தால் நிச்சயம் விமர்சனங்கள் வரும்...

2026-07-17 21:48:04
news-image

சிறுபான்மைக் கட்சிகளின் புதிய கூட்டணி எமக்குத்...

2026-07-17 14:35:02
news-image

ஊழியர்களின் பணத்தை கொள்ளையடிப்பதற்கே அரசாங்கம் முயற்சிக்கிறது...

2026-07-17 16:33:07