26,000 மின்சார சபை உத்தியோகத்தர்களின் தொழில் பாதுகாப்பு கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது - தயாசிறி ஜயசேகர

22 Sep, 2025 | 04:45 PM
image

(எம்.மனோசித்ரா)

மின்சார சபை மறுசீரமைப்பும் தற்போது பெரும் சர்ச்சையாகியுள்ளது. சுமார் 26,000 உத்தியோகத்தர்கள் வீதிக்கு இறங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அவர்கள் மறுசீரமைப்பிற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக அரசாங்கம் தவறான கருத்தினைப் பரப்புகிறது. அவர்களது தொழில் பாதுகாப்பு கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளமையே உண்மை நிலைவரமாகும் என பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

கொழும்பில் திங்கட்கிழமை (22) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

சூரிய சக்தி மின் உற்பத்தியில் தற்போது பாரிய பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. மின்சக்தி துறை தொடர்பில் அரசாங்கத்திடம் எந்த வேலைத்திட்டமும் இல்லை. இவற்றுக்கு மத்தியில் மின்சாரசபை மறுசீரமைப்பும் தற்போது பெரும் சர்ச்சையாகியுள்ளது.

சுமார் 26 000 உத்தியோகத்தர்கள் வீதிக்கு இறங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். முன்னாள் அமைச்சர் காஞ்சன விஜேசேகர முன்வைத்த மின்சாரசபை மறுசீரமைப்பு சட்டத்தை கிழித்தெறிவதாகக் கூறியவர்கள் தற்போது அதை எவ்விம மாற்றங்களும் இன்றி நடைமுறைப்படுத்துகின்றனர்.

அரசாங்கத்தின் இந்த தன்னிச்சையான நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ள மின்சாரசபை உத்தியோகத்தர்கள், தமது எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை தீவிரப்படுத்தப் போவதாகக் குறிப்பிட்டுள்ளனர். அவர்களுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து பிரச்சினைக்கு தீர்வினை வழங்குவதை விடுத்து, அவர்களுடன் மோதிப் பார்ப்போம் என்கின்றார் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, கடந்த ஆட்சி காலங்களில் முன்னெடுக்கப்படவிருந்த சகல மின்சக்தி அபிவிருத்தி திட்டங்களையும் இந்த ஊழியர்களைக் கொண்டே ஜே.வி.பி. தடுத்து நிறுத்தியது.

மறுசீரமைப்பினை அவர்கள் எதிர்க்கவில்லை. ஆனால் அதன் ஊடாக தமது தொழிலுக்கு ஏற்படக் கூடிய நிச்சயமற்ற தன்மைக்கு தீர்வினைக் கோரியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றனர். மின்சாரசபையை தொகுதிகளாகப் பிரித்து 6 நிறுவனங்களாக நிறுவப்படவுள்ளது. அவற்றில் 4 நிறுவனங்கள் மாத்திரமே நிறுவப்பட்டுள்ளன. ஏனைய இரண்டும் என்ன என்பது அரசாங்கத்துக்கே தெரியாது.

மின்சக்தி துறை குறித்த எவ்வித அனுபவமும் அற்ற அதிகாரிகள் இதற்காக நியமிக்கப்பட்டுள்ளனர். இன்று அரசாங்கத்துக்கு எதிராக செய்திகளை வெளியிடும் போது, அதனுடன் தொடர்புடையவர்கள் குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு அழைக்கப்படுகின்றனர் இவ்வாறான செயற்பாடுகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நீதியின் ஓலம்': எதிர்வரும் 14 -...

2026-08-08 17:44:05
news-image

மெகசின் சிறையிலுள்ள கைதிகளுக்கு போதைப்பொருள் வழங்க...

2026-08-08 19:25:51
news-image

சிறைச்சாலை மோதல்கள்: 5 வாரங்களில் 36...

2026-08-08 16:46:41
news-image

நீதித்துறையின் சுயாதீனத்தை சிதைக்க ஜனாதிபதி அநுர...

2026-08-08 16:01:44
news-image

வலப்பனை மல்லியப்பூ தோட்ட அம்மன் ஆலய...

2026-08-08 18:38:24
news-image

சிறைச்சாலை பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது அவசியம்:...

2026-08-08 15:22:29
news-image

வெவ்வேறான இடங்களில் இரு வீதி விபத்துக்கள்:...

2026-08-08 17:53:59
news-image

ஆக்கிரமிக்கப்பட்ட வீதியை வைத்து தெற்கில் குழப்பம்...

2026-08-08 17:26:46
news-image

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டுச் சிகரெட்டுகளுடன்...

2026-08-08 17:21:58
news-image

அரசியல் கைதிகளின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துங்கள் -...

2026-08-08 17:10:55
news-image

இலங்கையர்களை இலக்கு வைத்து இணையவழிப் பண...

2026-08-08 17:08:46
news-image

இந்திய மீனவர்களின் ஊடுருவல் தென்பகுதி வரை...

2026-08-08 17:08:36