ஒளிப்பதிவாளரும், நட்சத்திர நடிகருமான நட்டி நட்ராஜ் - தயாரிப்பாளரும் , நடிகருமான அருண் பாண்டியன் ஆகிய இருவரும் முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் 'ரைட்' திரைப்படம் - காவல் நிலையத்தின் பின்னணியில் கொமர்சல் திரில்லராக உருவாக்கப்பட்டிருக்கிறது என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
அறிமுக இயக்குநர் பாலசுப்ரமணியன் ரமேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ரைட்' திரைப்படத்தில் நட்டி நட்ராஜ் , அருண் பாண்டியன் , அக்ஷரா ரெட்டி, மூணார் ரமேஷ், யுவினா, வினோதினி ,ரோஷன், ஆதித்யா சிவக் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
எம். பத்மேஷ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு குணா பாலசுப்ரமணியன் இசையமைத்திருக்கிறார். கொமர்சல் திரில்லராக தயாராகியிருக்கும் இந்த திரைப்படத்தை ஆர்டிஎஸ் பிலிம் ஃபேக்டரி நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் திருமால் லட்சுமணன் மற்றும் தி. ஷ்யாமளா ஆகியோர் தயாரித்திருக்கிறார்கள்.
எதிர்வரும் 26 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தினை விளம்பரப்படுத்தும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இதில் படக் குழுவினருடன் நடிகரும், இயக்குநருமான ரவி மரியா சிறப்பு அதிதியாக பங்கு பற்றினார்.
படத்தை பற்றி இயக்குநர் பேசுகையில், '' இந்த திரைப்படம் ஒரே இடத்தில் நடக்கும் கதை. அதனால் நடிகர்களை திரையில் காட்சிப்படுத்துவதில் சவால்கள் இருந்தது. காவல் நிலையத்தின் பின்னணியில் திரில்லராக உருவாகி இருக்கும் இந்த கதை அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவரும் என நம்புகிறேன்'' என்றார்.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM