வவுனியா, மூன்று முறிப்பு, ஏ-9 வீதியில் ஹயஸ் வேன் மற்றும்  ஹன்ரர் ரக வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச் சம்பவம் இன்று காலை 6 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக வவுனியா பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

கொழும்பில் இருந்து கிளிநொச்சி நோக்கி குடும்பம் ஒன்றினை ஏற்றிச் சென்ற ஹயஸ் வாகனம் ஏ-9 வீதியின்  மூன்றுமுறிப்பு பகுதியில் சுண்ணாம்பு பைகற்றுக்களை ஏற்றிச் சென்ற ஹன்ரர் ரக வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.

 

கொழும்பில் இருந்து சுண்ணாம்பு பைக்கற்றுக்களுடன் சென்ற ஹன்ரர் ரக வாகனம் மூன்று முறிப்பு பகுதியில் அதன் டயர் காற்றுப்போனமையால் அதன் பின் ரயர்களை கழற்றிக் கொண்டிருந்த போது பின்னால் வந்த ஹயஸ் வேன்  மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன்போது குறித்த வாகனத்தின் சாரதி மற்றும் குடும்பஸ்தர் ஆகியோர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், ஹயஸ் வாகனத்தில் பயணித்த பெண் ஒருவரும் அவரது மூன்று பிள்ளைகளும் சிறு காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா போக்குவரத்து பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.