பதுளை, மஹியங்கனை - ரிதிமாலியத்த பிரதேச ஊடகவியலாளர் விமுக்தி சஞ்சய பெரேரா தாக்குதலுக்கான சம்பவத்துடன் தொடர்புடைய மரக்கடத்தல்காரரை கைதுசெய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதற்கு பொலிஸார் ஏன் தாமதிக்கின்றனர் என சுதந்திர ஊடக இயக்கம் கேள்வி எழுப்பியுள்ளனர்.
ரிதிமாலியத்த பிரதேச ஊடகவியலாளர் விமுக்தி சஞ்சய பெரேரா செப்டெம்பர் 19 ஆம் திகதி அன்று மரக்கடத்தல்காரர் ஒருவரால் பலமாக தாக்கப்பட்டு காயமடைந்துள்ளார்.
காயமடைந்த ரிதிமாலியத்த பிரதேச ஊடகவியலாளர் விமுக்தி சஞ்சய பெரேரா சிகிச்சைக்காக ஊரனிய பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மஹியங்கனை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக சுதந்திர ஊடக இயக்கம் தெரிவித்துள்ளது.
தாக்குதல் சம்பவத்தினையடுத்து சந்தேக நபரான மரக்கடத்தல்காரர் பிரதேசத்தில் சுதந்திரமாக சுற்றித்திரிந்ததாக பிரதேச ஊடகவியலாளர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபரான மரக்கடத்தல்காரர் ரிதிமாலியத்த பிரதேச செயலாளருக்கு மரப்பலகை தொழில் தொடர்பில் போலி ஆவணம் ஒன்றை வழங்கி ரிதிமாலியத்த பிரதேச செயலாளர் மற்றும் ரிதிமாலியத்த பிரதேச ஊடகவியலாளர் விமுக்தி சஞ்சய பெரேரா ஆகியோரை பிறிதொரு இடத்திற்கு அழைத்துச் சென்று பலமாக தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தாக்குதலில் ரிதிமாலியத்த பிரதேச ஊடகவியலாளர் விமுக்தி சஞ்சய பெரேராவின் கமராவும் சேதமடைந்துள்ளது.
இந்த தாக்குதலின் போது ரிதிமாலியத்த பிரதேச செயலாளரும் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆனால் சந்தேக நபரான மரக்கடத்தல்காரரை கைதுசெய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதற்கு பொலிஸார் தாமதிக்கின்றனர்.
பொலிஸார் சந்தேக நபரான மரக்கடத்தல்காரருக்கு ஆதரவளிப்பதாக சுதந்திர ஊடக இயக்கம் சந்தேகிக்கின்றது.
எனவே சம்பந்தப்பட்டவர்களை கைதுசெய்து அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு சுதந்திர ஊடக இயக்கம் கேட்டுக்கொண்டுள்ளது.













கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM