நுவரெலியாவில் மோட்டார் சைக்கிள் - லொறி மோதி விபத்து - இளைஞன் பலி!

22 Sep, 2025 | 11:30 AM
image

நுவரெலியாவில் மோட்டார் சைக்கிள் மீது லொறி மோதி ஏற்பட்ட விபத்தில் இளைஞன்  ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து உடப்புசல்லாவை - நுவரெலியா பிரதான பிரதான வீதியில் ஹவேலியா சந்தியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (21) இரவு இடம்பெற்றுள்ளது.

விபத்தில் உயிரிழந்தவர் ஹவேலியா பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞன் ஆவர்.

ராகலை பகுதியில் இருந்து நுவரெலியா நோக்கி பயணித்த லொறி ஒன்று எதிர்த்திசையில் பயணித்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தின் போது மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற இளைஞன் காயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட பொது  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இன்று திங்கட்கிழமை (22) அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், சந்தேகத்தின் பேரில் லொறியின் சாரதியை கைது செய்துள்ளதாக மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளும்  நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர் .

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை - சவூதி இடையிலான இருதரப்பு...

2025-11-10 16:37:24
news-image

முல்லைத்தீவில் கரையோர மாவீரர்களை நினைவுகூர்ந்து அஞ்சலி

2025-11-10 18:47:36
news-image

கணக்காய்வாளர் நாயகத்தின் 2024ஆம் ஆண்டுக்கான வருடாந்த...

2025-11-10 18:52:51
news-image

அதிபர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்காக ஆசிரியர்கள் டிசம்பரில்...

2025-11-10 18:22:43
news-image

கரடியனாறு பகுதியில் யானை தாக்குதலுக்கு இலக்காகி...

2025-11-10 18:12:42
news-image

ஐ.தே.கவின் அரசியல் அணிதிரட்டலுக்கான பிரதி பொதுச்...

2025-11-10 18:01:43
news-image

ஏறாவூரில் வாள்களுடன் பெண் கைது

2025-11-10 17:07:20
news-image

புத்தல - மொனராகலை பிரதான வீதியில்...

2025-11-10 17:01:40
news-image

கஞ்சா வியாபாரி கைது!

2025-11-10 18:05:14
news-image

பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதை...

2025-11-10 16:54:00
news-image

இலங்கை - சவூதி அரேபியாவுக்கு இடையேயான...

2025-11-10 17:33:54
news-image

11 இந்திய மீனவர்கள் கைது!

2025-11-10 16:35:49