ஜனாதிபதியையும் மீறி பிரதமர் எவ்வாறு செயற்படமுடியும் என ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார கேள்வியெழுப்பினார்.

ஜனாதிபதியால் பிற்படுத்தப்பட்ட துறைமுக ஒப்பந்தத்தை பிரதமர் அவசரமாக கைச்சாத்திட்டதன் பின்னணியை அரசாங்கம் வெளிப்படுத்தவேண்டும். ஜனாதிபதியையும் மீறி பிரதமர் எவ்வாறு செயற்படமுடியும் என்பதையும் எமக்குத் தெரிவிக்கவேண்டுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

சோசலிச மக்கள் முன்னணி கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார மேற்கண்டவாறு தெரிவித்தார்.