சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா பிரேரணை ; இறுதி முடிவு எதிர்க்கட்சித் தலைவர்களுடனான சந்திப்பில்

Published By: Vishnu

22 Sep, 2025 | 01:36 AM
image

(இராஜதுரை ஹஷான்)

சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வருவது குறித்து இறுதி தீர்மானம் ஏதும் எடுக்கப்படவில்லை. இவ்வாரம் நடைபெறவுள்ள எதிர்க்கட்சித் தலைவர்களுடனான சந்திப்பின் போது இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்தார்.

சமகால அரசியல் நிலைவரம் குறித்து வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவின் செயற்பாடுகள் பாராளுமன்ற கோட்பாடுகளுக்கும்,ஜனநாயகத்தின் அடிப்படை அம்சங்களுக்கும் முற்றிலும் விரோதமானது. பாராளுமன்றத்தின் ஜனநாயகத்தையும், எதிர்க்கட்சிகளின் உரிமைகளையும் அவர் பாதுகாப்பதில்லை. ஆளும் கட்சிக்கு சார்பாகவே செயற்படுகிறார்.

சபாநாயகர் தனது பதவிக்கான அதிகாரம் மற்றும் பொறுப்பினை அறியாமல் உள்ளரா என்பது சந்தேகமாகவுள்ளது. சபைமுதல்வர் பிமல் ரத்நாயக்கவே சபாநாயகரை இயக்குகிறார்.

பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகரவுக்கு எதிராக கொண்டு வந்த நம்பிக்கையில்லா பிரேரணை முறையற்ற வகையில் சபாநாயகரால் புறக்கணிக்கப்பட்டுள்ளது.இந்த நம்பிக்கையில்லா பிரேரணையை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளாமல் புறக்கணிப்பதற்கு சபாநாயகர் குறிப்பிட்ட காரணிகள் நடைமுறைக்கு பொறுத்தமற்றது.

சபாநாயகரின் ஒருதலைபட்சமான செயற்பாட்டை கண்டித்து அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வர வேண்டும் என்று பல்வேறு தரப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வருவது குறித்து இறுதி தீர்மானம் ஏதும் எடுக்கப்படவில்லை.இவ்வாரம் நடைபெறவுள்ள எதிர்க்கட்சித் தலைவர்களுடனான சந்திப்பின் போது இறுதி தீர்மானம் எடுக்கப்படும்.சபாநாயகரின் செயற்பாடு தொடர்பில் மக்கள் மத்தியில் நல்லதொரு நிலைப்பாடு கிடையாது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

டிஜிட்டல் நிர்வாக, ஊழல் ஒழிப்பு நடவடிக்கை...

2026-07-22 18:14:00
news-image

ஜப்பான் அரசின் கடன் உதவித் திட்டத்தின்...

2026-07-22 12:54:12
news-image

இலங்கை பட்டய ஊடகவியலாளர் நிறுவனத்தை உருவாக்கும்...

2026-07-22 17:34:35
news-image

காய்ச்சல் ஏற்பட்டால் காலம் தாமதிக்காமல் உடனடியாக...

2026-07-22 14:18:56
news-image

ஜனாதிபதி மாளிகைகளை பயனுள்ள முறையில் பயன்படுத்த...

2026-07-22 14:50:18
news-image

ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை...

2026-07-22 14:49:18
news-image

புதுப்பிக்கத்தக்க மின்சாரக் கட்டண நிர்ணயத்துக்கான மக்கள்...

2026-07-22 14:52:16
news-image

புகையிரத சேவையை நவீனமயமாக்க 2027–2029 அபிவிருத்தித்...

2026-07-22 23:07:26
news-image

வடிகாண்களை மக்கள் அபகரித்து தடைகளை ஏற்படுத்துவதால்...

2026-07-22 15:49:49
news-image

பகிடிவதையால் ஒருவர் உயிரிழப்பு, 106 பேர்...

2026-07-22 14:52:40
news-image

நீதிமன்ற உத்தரவுக்கு அமைய அரசியல் கைதிகள்...

2026-07-22 16:01:58
news-image

சஜித் - ரணில் பங்கேற்புடன் நாளை...

2026-07-22 16:02:17