போதைப்பொருள் கடத்தல் மற்றும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளின் பாதகமான விளைவுகள் குறித்தும்,தற்போதைய சட்டம் குறித்தும் மீனவர்களுக்கு கடற்படையினால் தெளிவுப்படுத்தப்பட்டது.
போதைப்பொருள் கடத்தல் மற்றும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை எதிர்த்து போராடுவது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நீர்கொழும்பு பகுதியில் உள்ள மீனவ சமூகத்தினருக்கு சிறப்பு தெளிவுப்படுத்தல் நிகழ்வு கடந்த வாரம் அப்பகுதியில் உள்ள மீனவ சங்கங்களின் பிரதிநிதிகளின் பங்கேற்புடன் நடைபெற்றது.
அதன்படி போதைப்பொருள் கடத்தல் மற்றும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளின் பாதகமான விளைவுகள் குறித்தும்,தற்போதைய சட்டம் குறித்தும் மீனவர்களுக்கு இதன்போது தெளிவுப்படுத்தப்பட்டது.சட்டரீதியில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடும் மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் அவர்களின் கோரிக்கைகள் குறித்து இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது.
இந்த சிறப்பு நிகழ்வில் மேற்கு கடற்படை கட்டளைத் துணை தளபதி,நீர்கொழும்பு மீன்வள உதவி இயக்குநர்,மேற்கு கடற்படை கட்டளையின் சிரேஷ்ட அதிகாரிகள்,மீன்வள ஆய்வாளர்கள் மற்றும் மீன்பிடி சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்துக்கொண்டனர்.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM