கள்ளக்காதலியின் தலையில் விஷ ஊசியை ஏற்றி கொலை செய்ததாக தீர்ப்பளிக்கப்பட்ட நபருக்கு கேகாலை மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.

விஷ ஊசியேற்றி கொலை செய்யப்பட்ட பெண், கேகாலை மோலகொட - வல்பொல பிரதேசத்தை சேர்ந்த 3 பிள்ளைகளின் தாய் என்பதுடன் குறித்த பெண்ணின் கள்ளக் காதலனான கேகாலை மோலகொட பிரதேசத்தை சேர்ந்த நபருக்கே இவ்வாறு மரண தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இச் சம்பவம் கடந்த 2006 ஆம்ஆண்டு மார்ச் மாதம் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் விஷ ஊசியேற்றப்பட்டு இறந்த பெண் தனது வீட்டில் இருந்த போது, வீட்டின் பின்புறமாக வந்த குறித்த கள்ளக்காதலன் மறைந்திருந்து பெண்ணின் தலையில் விஷ ஊசியை ஏற்றியுள்ளார். 

இந்நிலையில், குறித்த சம்பவத்தை பெண்ணின் மகள் அவதானித்ததையடுத்து, குறித்த கொலை தொடர்பான வழக்கு விசாரணைகள் கேகாலை நீதிவான் நீதிமன்றத்தில் இடம்பெற்று வந்தன.

இதையடுத்து குறித்த வழக்கு பின்னர் சட்டமா அதிபரால், கேகாலை மாவட்ட மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டிருந்த நிலையில்,  தொடர்ந்து இடம்பெற்ற வழக்கு விசாரணைகளையடுத்து குறித்த நபரை குற்றவாளியாகக் கண்ட கேகாலை மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.