செப்டம்பர் 21 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையன்று அதாவது நாளை அமாவாசை திதியுடன் இணைந்து வருவதால் இதனை பாதிரபத அமாவாசை என்றும் ,மகாளாய அமாவாசை என்றும் எம்முடைய முன்னோர்கள் குறிப்பிடுகிறார்கள்.
ஒவ்வொரு ஆண்டும் ஆடி அமாவாசை - தை அமாவாசை - புரட்டாசி மஹாலய அமாவாசை ஆகிய மூன்று அமாவாசைகள் முக்கியமானவை.
இவற்றில் புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசை எம்முடைய முன்னோர்கள் பித்ரு தேவதைகளின் ஆசியுடன், பித்ரு லோகத்தில் இருந்து பூலோகத்தின் தென் திசைக்கு வருகை தந்து, சூட்சம ஆற்றலாக அவர்கள் வாழ்ந்த பூர்வீக வீட்டிற்கு அருகே உள்ள அரச மரத்தில் வருவதாக ஐதீகம்.
இதனால் இவர்களின் ஆசியை பெறுவதற்கும், பித்ரு தேவதைகளின் ஆசியை பெறுவதற்கும் பின்பற்ற வேண்டிய குறிப்புகளையும், கட்டாயம் தவிர்க்க வேண்டிய விடயங்களையும் பட்டியலிட்டிருக்கிறார்கள். அதனை தொடர்ந்து காண்போம்.
கடுகு, கருப்பு மிளகு, துடைப்பம், இரும்பு. ஆகிய எம்முடைய நாளாந்த தேவைகளுக்கு பயன்படும் பொருட்களை இந்த நாளில் மறந்தும் வாங்க கூடாது. வாங்கினாலும் அதனை வீட்டிற்கு எடுத்து வரக்கூடாது.
கோலம் போட கூடாது.
வாசலில் மஞ்சள் மற்றும் குங்குமம் பூசக் கூடாது.
மாவிலைத் தோரணம் கட்டக் கூடாது.
துளசி செடிக்கு நீரூற்றக்கூடாது.
எந்த வடிவத்திலும் நெல்லிக்காயை சாப்பிட கூடாது.
இந்த குறிப்புகளை மீறினால்...இதன் காரணமாக பித்ரு தேவதைகள் எம்முடைய வீட்டிற்கு வருவதை தவிர்த்து விடுவார்கள். அவர்களின் ஆசியும் கிடைக்காது. எம்முடைய முன்னோர்களின் ஆசியும் கிடைக்காது.
அதே தருணத்தில் ஒரு கோப்பை தண்ணீரில் சிறிதளவு குங்குமம் மற்றும் ஏழு காய்ந்த சிவப்பு மிளகாய் விதைகளை போட்டு, அதனை அருகில் உள்ள எருக்கஞ்செடியின் அடிப்பகுதியில் ஊற்றிட வேண்டும்.
இதனால் உங்களது ஜாதகத்தில் தோஷங்கள் இருந்தால்... (ஞாயிற்றுக்கிழமையும் அமாவாசை திதியும் இணைந்த) இந்த நாளில் இந்த சூட்சமமான பரிகாரத்தை மேற்கொண்டால்... தோஷங்கள் அனைத்தும் விலகும்.
தொகுப்பு: சுபயோக தாசன்.




















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM