மட்டக்களப்பு மாவட்டத்தின் வாவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாவற்கொடிச்சேனைப் பகுதியில் துப்பாக்கிச்சூட்டுக் காயங்களுடன் இறந்த நிலையில் யானையின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பாவற்கொடிச்சேனைப் பகுதியில் உள்ள மக்கள் குடியிருப்பு பகுதியை அண்டிய காட்டுப்பகுதியில் இருந்தே இந்த யானையின் சடலம் நேற்று மாலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இன்று பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆண் யானையின் மரணம் தொடர்பில் வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் வவுணதீவு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

கடந்த இரு மாதங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆறுக்கும் மேற்பட்ட யானைகள் உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.

குறிப்பாக காட்டுயானை தாக்குதல்கள் அதிகம் உள்ள பகுதிகளிலேயே இவ்வாறு யானைகள் இறக்கும் சம்பவங்கள் இடம்பெற்றுவருகின்றது.

- ஜவ்பர்கான்