சாய்ந்தமருது உணவகங்களில் சுகாதார குறைபாடுகளை கண்டால் உடனே தெரியப்படுத்துங்கள் - சுகாதார வைத்திய அதிகாரி

20 Sep, 2025 | 01:14 PM
image

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவின் கீழ் செயல்படும் சுகாதார பரிசோதகர்கள், சாய்ந்தமருது பகுதிகளில் உள்ள உணவகங்களில் திடீர் பரிசோதனைகளை மேற்கொண்டனர். 

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஜே. மதன் நேரடி வழிகாட்டுதலின் கீழ் இந்த திடீர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது, சுகாதார நெறிமுறைகள் பின்பற்றப்படாமல் தயாரிக்கப்பட்ட உணவுகள், மனித நலனுக்கு தீங்கு விளைவிக்கும் தரமற்ற உணவுப் பொருட்கள், உணவு சேமிப்பு மற்றும் தயாரிப்பு பகுதிகளில் காணப்பட்ட சுகாதாரமின்மை என பல பிரச்சினைகள் கண்டறியப்பட்டன.

இக்குறைபாடுகளைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட உணவக உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

மேலும், இந்த உணவகங்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்வதற்கான பணிகளை அதிகாரிகள் ஆரம்பித்துள்ளனர்.

இதன் போது சுகாதார வைத்திய அதிகாரி, பொது மக்களிடம் உணவகங்களில் உணவருந்தும் போது அங்குள்ள சுகாதார நிலையை கவனிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டதோடு ஏதேனும் சுகாதார குறைபாடுகள் கண்டால் உடனடியாக சுகாதார பிரிவுக்கு தகவல் தருமாறு கேட்டுக் கொண்டார்.

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவின் கீழ் பல தடவைகள் அறிவிக்கப்பட்டிருந்தும் சுகாதார விதிமுறைகளை மீறிய உணவக உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதுடன் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற  பழுதடைந்த உணவு பொருட்களும் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டன.

பாவிக்க முடியாத  சேதமடைந்த உணவு தயாரிக்கும் பாத்திரங்களும் இதன்போது கைப்பற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பொதுமக்களின் நலன்கருதி பிராந்தியத்தில் உள்ள உணவகங்கள்  உணவு கையாளும் நிறுவனங்கள் சோதனைக்குட்படுத்தும் வேலைத்திட்டம் பிராந்திய பணிப்பாளர் உத்தரவிற்கமைவாக தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படவுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசியலமைப்புத் திருத்தங்கள் ஊடாக அதிகாரத்தை மையப்படுத்தும்...

2026-09-15 16:31:05
news-image

அநுராதபுரம் கட்சி கூட்டத்தில் விடுதலைப் புலிகள்...

2026-09-15 17:47:07
news-image

பேராதனை பல்கலைக்கழக கட்டிடப் பிரச்சினைகளுக்கு 2027க்குள்...

2026-09-15 15:36:04
news-image

நாமல் ராஜபக்‌ஷவை திருடன் என விமர்சிப்பவர்கள்...

2026-09-15 13:51:52
news-image

சுரேஷ் சலேவிடம் வைத்தியசாலையில் முழுமையான விசாரணை...

2026-09-15 17:28:41
news-image

அரசியலமைப்பின் 22ஆவது திருத்தம் : பொதுவெளியில்...

2026-09-15 19:08:21
news-image

இலங்கை பொருளாதாரம் 2026 இரண்டாம் காலாண்டில்...

2026-09-15 19:07:51
news-image

செப். 25 முதல் ஒக். 1...

2026-09-15 19:06:41
news-image

தடயவியல் பகுப்பாய்வு அறிக்கைகளை சமர்ப்பிப்பதில் நிலவும்...

2026-09-15 19:04:43
news-image

நாடு ஒரு புதிய அரசியல் கலாசாரத்துடன்...

2026-09-15 19:01:48
news-image

செப்டம்பர் 20 முதல் அதிவேக நெடுஞ்சாலைகளில்...

2026-09-15 18:33:27
news-image

எரிபொருள் விலை திருத்தம் : பெற்றோலியக்...

2026-09-15 18:17:35