எம்.எம்.மின்ஹாஜ்

தேசிய அரசாங்கத்தை நாம் ஒரு போதும் விட்டுகொடுக்க மாட்டோம். தேசிய பிரச்சினையை தீர்க்கும் வரைக்கும் தேசிய அரசாங்கத்தை விலாமல் பாதுகாப்போம். மேலதிமாக இரு போயா தினங்களை பெற்றுத் தருகின்றோம். முடியுமானால் ஆட்சியை கவிழ்த்து காட்டுங்கள் என ஐக்கிய தேசியக் கட்சி சவால் விடுத்தது.

Image result for kabir hashim virakesari

மேலும் தேசிய அரசாங்கத்தின் பிரதான கட்சிகளுக்கிடையிலான ஒப்பந்ததை நீடிப்பதா ? இல்லையா? என்பது இம்மாதம் சுதந்திரக் கட்சி எடுக்க போகும் தீர்மானத்தை பொறுத்து நாம் முடிவெடுப்போம் என்றும் அக்கட்சி குறிப்பிட்டது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அக்கட்சியின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான கபீர் ஹாஷிம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.