விவசாய உற்பத்திகளை சந்தைப்டுத்துவதில் இடர்பாடுகளை எதிர்நோக்கியுள்ள விவசாயிகள் ; நிலமைகளை நேரில் சென்று ஆராய்ந்தார் துரைராசா ரவிகரன்

19 Sep, 2025 | 05:46 PM
image

முல்லைத்தீவு மாவட்டத்தில் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் தமது விவசாய உற்பத்திப்பொருட்களைச் சந்தைப்படுத்துவதில் நீண்டகாலமாக இடர்பாடுகளை எதிர்நோக்கிவருகின்றனர்.

இந்நிலையில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அப்பகுதி மக்களின் அழைப்பை ஏற்று குறித்த பகுதிக்கு நேரடியாகச் சென்றதுடன் விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் கேட்டறிந்துகொண்டார்.

குறிப்பாக கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி ஆகிய பகுதிகளில் ஆறு கிராம அலுவலர் பிரிவுகளிலுமுள்ள விவசாயிகள் தாம் உற்பத்திசெய்யப்படுகின்ற வத்தகை, நிலக்கடலை, சோளம் உள்ளிட்ட உற்பத்திப் பொருட்களைச் சந்தைப்படுத்த முடியாமலுள்ளதால் பெரும் பாதிப்புக்களுக்குள்ளாகி வருகின்றனர்.

எனவே தமது பாதிப்பு நிலை உணர்ந்து, தம்மால் உற்பத்திசெய்யப்படுகின்ற விவசாய உற்பத்திகளை சந்தைப்படுத்துவதற்கு உரிய வழிவகைகளை ஏற்படுத்தித்தருமாறும் விவசாயிகளால் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

அதேவேளை குறித்த பகுதிகளில் தற்போது இருபது விவசாயிகள் 20ஏக்கரும் மேல் சோளப்பயிற்செய்கை மேற்கொண்டுள்ளனர். இவ்வாறுவிவசாயிகளால் உற்பத்திசெய்யப்பட்ட சோளத்தினையும் விவசாயிகளால் சந்தைப்படுத்தமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.  இந்நிலையில் சந்தைப்படுத்த முடியாத நிலையில் அறுவடைசெய்யப்படாத சோளம் தோட்டங்களையும் பார்வையிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், விவசாயிகளின் பாதிப்புத் தொடர்பிலும் கேட்டறிந்துகொண்டார்.

மேலும் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கருத்துத் தெரிவிக்கையில்,

விவசாயிகள் பெருத்த போராட்டங்களுக்கு மத்தியில் உற்பத்திசெய்த விளைபொருட்களை விற்பனை செய்யமுடியாத நிலை இங்கு காணப்படுகின்றது. எமது விவசாயிகள் எதிர்நோக்கும் இந்தப் பிரச்சினைக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்கப்படவேண்டும்.

அந்தவகையில் விரைவில் நாட்டில் ஆயிரம் உற்பத்தி கூட்டுறவு சங்களை நிறுவதற்குத் திட்டமிட்டுள்ளதாக அண்மையில் வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்திருப்பதாக அறிகின்றோம்.

எனவே அவ்வாறு நிறுவப்படவுள்ள குறித்த ஆயிரம் உற்பத்திக் கூட்டுறவுச் சங்கங்களில், மூன்று உற்பத்திக் கூட்டுறவு சங்கங்களை கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி ஆகிய பகுதிகளில் நிறுவதற்கு நடவடிக்கை எடுக்படவேண்டும். அதற்கான கோரிக்கையை உரிய அமைச்சருக்கு விரைவில் எழுத்துமூலமாகச் சமர்ப்பிப்பேன்.

அதற்கமைய இந்தப்பகுதிகளில் வத்தகை, சோளம் மற்றும் நிலக்கடலை என்பவற்றிற்கு தனித்தனியே உற்பத்த கூட்டுறவுச்சங்கங்கள் நிறுவப்பட்டால், இப்பகுதி விவசாயிகள் எதிர்நோக்கும் சந்தைப்படுத்தல் இடர்பாட்டிற்கு தீர்வு கிடைக்கும் - என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் வெளியான தகவல்!

2025-12-17 17:34:29
news-image

ஏறாவூரில் விடுதியில் தங்கியிருந்து போதைப்பொருள் விற்பனையில்...

2025-12-17 16:26:09
news-image

வடக்கு மாகாண சுற்றுலாத்துறை சார் முச்சக்கர...

2025-12-17 17:42:03
news-image

இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரி,...

2025-12-17 15:43:07
news-image

அனர்தகால உதவிகளை மக்களுக்கு சென்றடைவதை அரச...

2025-12-17 17:31:21
news-image

சுற்றுலாப் பயணிகளை கவரும் விதமான நிகழ்வை...

2025-12-17 17:30:29
news-image

கிண்ணியா பிரதேச செயலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்

2025-12-17 17:29:37
news-image

சட்டவிரோதமாக முதலைக் குட்டியை வைத்திருந்தவர் கைது!

2025-12-17 17:18:26
news-image

கொத்மலை - ரம்பொடை பகுதியில் மீட்கப்பட்டது...

2025-12-17 17:28:57
news-image

கணக்காய்வாளர் நாயகத்தை நியமிக்கத் தவறியமை நிர்வாகப்...

2025-12-17 17:11:28
news-image

அருட்தந்தை டொன் நிசாந்த சாகர ஜெயமன்ன...

2025-12-17 17:01:21
news-image

நாமலுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இளைஞன்!

2025-12-17 15:24:48