வெளிநாட்டு வேலைவாய்ப்பு சட்டத்தில் திருத்தம்: வெளிநாட்டு தொழில் துறைக்கு ஒழுங்குபடுத்தல் - அருன் ஹேமசந்திர

19 Sep, 2025 | 04:25 PM
image

(எம்.ஆர்.எம்.வசிம்)

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டு அல்லது தேவை என்றால் புதிய சட்டம் ஒன்றை கொண்டுவந்தாவது வெளிநாட்டு தொழில் துறையின் ஒழுங்குபடுத்தலுக்கு தேவையான நடவடிக்கைகளை விரைவில் மேற்கொள்வோம் என வெளிவிவிவகா, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருன் ஹேமசந்திர தெரிவித்தார்.

வெளிநாட்டு தொழில் வாய்ப்பு தொடர்பாக கிடைக்கப்பெறும் முறைப்பாடுகளை தேடிப்பார்த்தல் மற்றும் அவற்றுக்கு விரைவாக தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதற்காக பொலிஸ் அதிகாரிகளைக்கொண்ட விசேட விசாரணை பிரிவொன்றை திறந்து வைக்கும் நிகழ்வு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே  இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

வெளிநாட்டு தொழில் மோசடிகளை தடுப்பது மற்றும் முறைப்பாடுகளுக்காக விரைவாக தீர்வுகளை பெற்றுக்கொடுத்து புலம்பயர் சமூகத்துக்கு நிவாரணங்களை வழங்கும் நோக்கத்திலே பொலிஸ் அதிகாரிகள் அங்கிய விசாரணை பிரிவு அமைக்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களை பார்க்கும்போது கிடைக்கப்பெறும் முறைப்பாடுகள் அதிகரித்துள்ளன. வெளிநாட்டு தொழில் மோசடி செய்பவர்கள் பல்வேறு தந்திரங்களை பயன்படுத்துகின்றனர். சில குழுக்கள் பணியகத்தில் பதிவு செய்யாமல் முகவர் நிறுவனமாக செயற்பட்டு மோசடி செய்து வருகின்றன.

இன்னும் சிலர் பணியகத்தில் பதிவு செய்த முகவர் நிறுவனமாக மோசடி செய்கின்றனர். இது மாத்திரமல்ல, தற்போது  வருகை விசா முறையில், அதேபோன்று ஆலாேசனை வழங்கும் நிறுவனம் என்ற பெயரில் மறைந்திருந்து செயற்படுகின்றனர். அதனால் இவற்றில் மாட்டிக்கொள்பவர்கள் முறைப்பாடு செய்கின்றனர்.

கடந்த காலங்களில் ஒருசில அரசியல்வாதிகள் காரணமாக இந்த நிறுவனத்தின் நற்பெயர் சீரழிந்திருந்தது. அதனால்  மக்களுக்கு நம்பிக்கை இல்லாமல் போனது. என்றாலும் தற்போது அந்த நிலைமை முற்றாக மாற்றமடைந்து வருகிறது. 1985ஆம் ஆண்டு இந்த  பணியகம் ஆரம்பிக்கப்பட்டது. இந்த நிறுவனம் வெளிநாட்டு தொழில் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை என்பதுதான் எமது திட்டம்.

இந்த இடத்துக்கு வருபவர்களில் வெளிநாட்டு தொழில் வாய்ப்பொன்றை எதிர்பாரத்த்து வரும் சிலர் வந்தாலும்,  பொதுவாக ஏதாவது அவர்களின் முறைப்பாட்டை தெரிவிக்க, கவலையை கூறுவதற்கே வருகிறார்கள். இவ்வாறு  வருபவர்களின்  முறைப்பாடுகளுக்கு வெற்றிகரமாகவும் விரைவாகவும் தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதே எமது நடவடிக்கையாகும்.

அத்துடன் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள அல்லது தேவை என்றால் புதிய சட்டம் ஒன்றை கொண்டுவந்து வெளிநாட்டு தொழில் துறையின் ஒழுங்குபடுத்தலுக்கு தேவையான நடவடிக்கைகளை  மேற்கொள்வோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2025-12-17 06:13:15
news-image

யாழில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் கைது!

2025-12-17 01:32:44
news-image

யாழில் மாடியில் இருந்து விழுந்த குடும்பஸ்தர்...

2025-12-17 01:29:18
news-image

பாராளுமன்ற தெரிவுக்குழு அமைப்பதை விட, நீதிமன்றம்...

2025-12-17 01:03:01
news-image

அனர்த்தத்தின் பின்னரான நிவாரண வழங்கல் மற்றும்...

2025-12-17 00:59:49
news-image

'இலங்கையை மீளக்கட்டியெழுப்பல்' நிதியம் பற்றி மேல்மாகாண...

2025-12-17 00:52:57
news-image

எதிர்வரும் ஏப்ரல் மாதமளவில் பொருளாதார நெருக்கடி...

2025-12-16 15:48:49
news-image

நெருக்கடியான நிலையை அரசியல் இலாபத்துக்கு பயன்படுத்த...

2025-12-16 16:45:04
news-image

குறைநிரப்பு பிரேரணையை நிறைவேற்றிக் கொள்ள விசேட...

2025-12-16 22:09:31
news-image

அரசாங்கத்தின் தவறுகளை சுட்டிக்காட்டும் எமது குரலை...

2025-12-16 17:18:15
news-image

சமஷ்டி அரசியலமைப்பு உருவாக்கத்துக்கு அழுத்தம் வழங்குங்கள்...

2025-12-16 17:03:11
news-image

அசோக ரன்வல தொடர்பில் கட்சி என்ற...

2025-12-16 17:17:30