நுவரெலியாவில் கடும் பனிமூட்டம் நிலவுவதால் சாரதிகள் அவதி

19 Sep, 2025 | 03:37 PM
image

நுவரெலியாவில் கடந்த சில தினங்களாக கடும் பனிமூட்டத்துடன் கூடிய சாரல் மழையும் பெய்து வருகிறது.

அதன்படி இன்று வெள்ளிக்கிழமை (19) காலை நேரத்தில் சீத்தாஎலிய,  லபுக்கலை, குடாஓயா, மார்காஸ் தோட்டம், உலக முடிவு பிரதான வீதி, கந்தபளை,  நானுஓயா, நானுஓயா புகையிரத நிலையம், ரதல்ல குறுக்கு வீதி, டெஸ்போட், கிரிமிட்டி ஆகிய பகுதிகளில் கடும் பனிமூட்டத்துடன் கூடிய சாரல் மழை பெய்து வருகிறது.

இதனால் நுவரெலியா - கண்டி , நுவரெலியா - ஹட்டன் மற்றும் நுவரெலியா - வெளிமடை போன்ற பிரதான வீதிகளில் செல்லும் வாகனங்கள் அனைத்தும் முகப்பு விளக்குகளை ஒளிரச் செய்து மெதுவாக ஊர்ந்தபடியே செல்வதால் அடிக்கடி  போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வருகிறது .

இதனால் குறித்த வீதிகளை பயன்படுத்தும் வாகன சாரதிகள் மிகவும் எச்சரிக்கையாக நடந்துக்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குறிப்பாக தொடர்ந்து இவ்வாறான மோசமான  காலநிலை காரணமாக நுவரெலியாவில் கடும் குளிர் நிலவி வருவதால் உள்ளூர் வாசிகள் மட்டுமல்லாமல் வெளிநாட்டு  சுற்றுலாப் பயணிகளும் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர் .

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழில். வீதிக்கு கழிவு நீரை வெளியேற்றிய...

2025-11-15 15:14:08
news-image

மனித பாவனைக்கு உதவாத தேங்காய் எண்ணெயை...

2025-11-15 19:39:33
news-image

வலையில் சிக்கிய அரிய வகை கடல்...

2025-11-15 14:58:45
news-image

செல்வ சந்நதியில் ஆலய சூழலில் சுகாதார...

2025-11-15 15:02:58
news-image

பாடசாலைக்கு அருகில் போதை மாத்திரைகளை விற்பனை...

2025-11-15 16:49:01
news-image

கடும் மின்னல் தாக்கம் குறித்து பொதுமக்களுக்கு...

2025-11-15 15:01:34
news-image

19 இலட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள்...

2025-11-15 17:45:33
news-image

“கெஹெல்பத்தர பத்மே”வுக்கு சொந்தமான வங்கி கணக்குகள்...

2025-11-15 15:21:43
news-image

வவுனியா தேசிய கல்வியற்கல்லூரியில் ஆசிரிய மாணவர்களுக்கு...

2025-11-15 16:09:03
news-image

டெங்கு நுளம்பு பரவக்கூடிய சூழலை பேணிய...

2025-11-15 13:45:40
news-image

“பாணந்துறை குடு சலிந்து“வின் போதைப்பொருள் வலையமைப்பை...

2025-11-15 15:42:26
news-image

யாழில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட கும்பல்...

2025-11-15 13:19:06