அனுமதியின்றி யானையை வைத்திருந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுகளின் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட சமரப்புலிகே அலி ரொஷான் என அழைக்கப்படும் நிராஜ் ரொஷானுக்கு 15 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து கொழும்பு உயர் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை (19) உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு உயர் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அடங்கிய குழாம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
சிறைத்தண்டனைக்கு மேலதிகமாக, அலி ரொஷானுக்கு நீதிமன்றம் 2.06 மில்லியன் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
அனுமதியின்றி வைத்திருந்த யானையை மீட்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
நீண்ட விசாரணைக்குப் பின்னர், நீதிபதிகள் மஞ்சுள திலகரத்ன, ஆர்.எஸ்.எஸ். சப்புவிதா மற்றும் லங்கா ஜெயரத்ன ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
வழக்கு தொடர்பாக, குற்றம் சாட்டப்பட்டிருந்த மற்றைய மூன்று பிரதிவாதிகளை விடுவித்து விடுதலை செய்ய நீதிபதிகள் குழாம் மேலும் உத்தரவிட்டது.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM