பெருமாளின் அருளைப் பெறுவதற்கான பிரத்யேக நைவேத்திய வழிபாடு

18 Sep, 2025 | 06:24 PM
image

புரட்டாசி மாதம் பிறந்து விட்டால் எம்மில் பலரும் முருக பக்தர்களாக இருந்தாலும்... சிவ பக்தர்களாக இருந்தாலும்... தீவிர சைவ பக்தர்களாக இருந்தாலும் பெருமாளை மனதில் வழிபடுவர். அதே தருணத்தில் புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் அருகில் இருக்கும் பெருமாள் ஆலயத்திற்கு சென்று துளசி மாலையை சாற்றி மனமுருக வழிபடுவர். இதனால் அவர்களுக்கு தொடர்ந்து கிடைக்கும் வெற்றி மேலும் அதிகரிக்கும். இந்த தருணத்தில் வெற்றி பெறுபவர்கள் பெருமாளுக்கு நைவேத்தியமாக படைக்கும் நவநீதம் என்ற பிரத்யேக நைவேத்தியத்தை பற்றி பலரும் அறிந்திருக்க மாட்டார்கள். இது தொடர்பாக எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் சில குறிப்புகளை வழங்கியிருக்கிறார்கள்.

இதற்கு தேவையான பொருட்கள் : வெண்ணெய்- நாட்டுச் சர்க்கரை.

ரசாயனம் கலக்காத இயற்கையான முறையில் உருவாக்கப்பட்ட வெண்ணையையும், நாட்டு சர்க்கரையையும்.. விற்பனை நிலையங்களில் இருந்து வாங்கி வந்து அதனை கலந்தோ அல்லது கலக்காமல் தனித்தனியாகவோ புரட்டாசி சனிக்கிழமை தினத்தன்று அருகில் இருக்கும் பெருமாள் ஆலயத்திற்கு சென்று பெருமாளுக்கு நைவேத்தியமாக படைத்திட வேண்டும். அதன் பிறகு வழக்கம் போல் துளசி மாலையை சாற்றி பெருமாளை வழிபட வேண்டும். இதுபோன்ற வழிபாட்டில் பெருமாள் உளம் மகிழ்ந்து பக்தர்களின் வேண்டுதலை நிறைவேற்றுவார். இதனை மட்டுமே நைவேத்தியமாக படைக்க வேண்டுமா? என சிலர் கேள்வி எழுப்பக்கூடும். உங்கள் விருப்பத்திற்குரிய நைவேத்தியத்தை படைத்தாலும்.. இந்த நவநீதம் எனும் நைவேத்தியத்தை தவறாமல் இடம்பெறச் செய்து பெருமாளை வணங்கினால்... அருள் விரைவாகவும், நிறைவாகவும் கிடைக்கும்.

தொகுப்பு: சுபயோக தாசன்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தீர்வு தரும் வெற்றிலை வழிபாடு

2026-08-11 16:26:03
news-image

பெண் சாபம் மற்றும் தோஷங்கள் நீங்குவதற்கான...

2026-08-10 15:33:08
news-image

திசை மாறி பயணிக்கும் பிள்ளைகளை நெறிப்படுத்துவதற்குரிய...

2026-08-07 16:11:17
news-image

பண தடையை நீக்கும் பிரத்யேக குறிப்பு

2026-08-06 18:15:57
news-image

சிக்கல்களிலிருந்து நிவாரணம் பெறுவதற்கான எளிய வழிமுறை..!

2026-08-05 17:01:02
news-image

ராசிக் கல் சூட்சமங்கள்

2026-08-04 19:17:09
news-image

மன அழுத்த மேலாண்மைக்கான சூட்சம வழிபாடு..!?

2026-08-04 15:27:31
news-image

தொழிலில் உள்ள தடைகளை அகற்றுவதற்கான சூட்சம...

2026-08-01 17:06:21
news-image

கர்ம வினைகளின் தாக்கத்தை அளிப்பதற்கான பிரத்யேக...

2026-07-31 17:00:24
news-image

ஓகஸ்ட் மாத ராசி பலன்கள் -...

2026-07-31 15:07:30
news-image

நோய் பாதிப்பிலிருந்து தற்காத்துக் கொள்வதற்கான எளிய...

2026-07-30 17:19:48
news-image

சம்பாதிக்கும் பணத்தை சேமிப்பதற்கான சூட்சம வழிமுறை..!?

2026-07-29 17:05:08