போதைப்பொருள் நாடுகளின் பட்டியலில் இந்தியா: டிரம்ப் வெளியிட்ட தகவல்

18 Sep, 2025 | 04:07 PM
image

இணையதளச் செய்திப் பிரிவு

சட்டவிரோத போதைப்பொருள் தயாரிப்பு மற்றும் கடத்தலில் ஈடுபடும் நாடுகளின் பட்டியலை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அமெரிக்க நாடாளுமன்றத்தில் வெளியிட்டார்.

இந்தப் பட்டியலில் இந்தியா உள்ளிட்ட 23 நாடுகள் இடம்பெற்றுள்ளன.

இந்தப் பட்டியலில் ஆப்கானிஸ்தான், சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளுடன் இந்தியாவும் சேர்க்கப்பட்டுள்ளது.

இந்தப் பட்டியலில் உள்ள நாடுகள் போதைப்பொருள் கடத்தல் மற்றும் அதன் தயாரிப்பில் ஈடுபட்டு வருவதால், அமெரிக்கா மற்றும் அதன் குடிமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையில் தவறியதாக ஆப்கானிஸ்தான், பொலிவியா, மியான்மர் உள்ளிட்ட ஐந்து நாடுகளை அவர் குறிப்பாகக் குறிப்பிட்டு, தீவிர நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பின் இந்த நடவடிக்கை இந்தியாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இந்தியா போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராகப் பல நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், இந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டிருப்பது அரசியல் மற்றும் சமூக மட்டங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான யோங்கிங்...

2025-11-14 18:01:55
news-image

இந்தியா - கர்நாடகாவில் பெண் பணியாளர்களுக்கு...

2025-11-14 14:02:26
news-image

அமெரிக்காவில் 43 நாள் நீடித்த அரசு...

2025-11-13 17:56:17
news-image

“உங்களுக்கு எத்தனை மனைவிகள்?” - சிரியா...

2025-11-13 16:09:16
news-image

டெல்லியில் நடந்தது ஒரு தெளிவான பயங்கரவாத...

2025-11-13 13:41:46
news-image

கானாவில் இராணுவத்துக்கு ஆட்சேர்ப்பு - சன...

2025-11-13 16:05:49
news-image

சைப்ரஸில் நிலநடுக்கம் 

2025-11-12 17:26:28
news-image

அமெரிக்காவில் சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதில்...

2025-11-12 16:09:57
news-image

அவுஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்களை...

2025-11-12 16:06:26
news-image

தென்சீனாவில் சில மாதங்களுக்கு முன் திறக்கப்பட்ட...

2025-11-12 14:32:17
news-image

இந்தியாவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் -...

2025-11-12 12:17:16
news-image

எகிப்தில் சுற்றுலா பஸ் மீது லொறி...

2025-11-12 11:43:56