யாழ். மாவட்ட விசேட போக்குவரத்து ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் 

18 Sep, 2025 | 01:51 PM
image

யாழ்ப்பாணம் மாவட்ட விசேட போக்குவரத்து ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று (18) யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் பங்கேற்புடன் நடைபெற்ற இக்கூட்டத்தில் கடற்றொழில் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், மாவட்ட செயலாளர் ம.பிரதீபன், நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள், போக்குவரத்து திணைக்கள அதிகாரிகள், பாதுகாப்பு அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்றனர்.

யாழ். மாவட்டத்தில் போக்குவரத்துத்துறை எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள், அவற்றுக்கான தீர்வுகள் மற்றும் எதிர்கால மேம்பாட்டுத் திட்டங்கள் பற்றி இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளன. 

எவ்வாறான பகுதிகளில் வீதி அபிவிருத்திகளை மேற்கொள்ளவேண்டியுள்ளது, எப்பகுதிகளுக்கு விசேட போக்குவரத்து சேவை தேவைப்படுகிறது உள்ளிட்ட விடயங்களை அமைச்சர் சுட்டிக்காட்டிருந்தார்.

அதேபோல தீவுப் பகுதிகளுக்குரிய பாதுகாப்பான கடல் போக்குவரத்துப் பயணம் மற்றும் அதற்கான வழிமுறைகள் பற்றியும் எடுத்துரைத்திருந்தார்.

நாட்டில் ஏனைய பகுதிகளில் இருந்து யாழ். மாவட்டத்தை மையப்படுத்தியதான பொதுப் போக்குவரத்து, வர்த்தக போக்குவரத்து மற்றும் சந்தை நடவடிக்கைகளுக்கான போக்குவரத்து என்பன பற்றியும் கவனம் செலுத்தப்பட்டன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுமார் 300 கிலோ போதைப்பொருட்களுடன் 6...

2025-11-12 10:41:26
news-image

எதிர்க்கட்சியினரிடம் ஹிட்லர் போல் கத்தி, ஐ.எம்.எப்....

2025-11-12 11:17:11
news-image

சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட பீடி இலைகளுடன்...

2025-11-12 10:22:56
news-image

முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கைது!

2025-11-12 09:59:37
news-image

பெருந்தோட்ட மக்களுக்கான தீர்வுகளை மலினப்படுத்தும் எதிர்க்கட்சியின்...

2025-11-12 10:00:34
news-image

வளமான நாடு அழகான வாழ்க்கையை ஏற்படுத்துவதற்கு...

2025-11-12 09:38:17
news-image

குடும்ப நல சுகாதார சேவையில் எழுந்துள்ள...

2025-11-12 09:37:06
news-image

தமிழ் மக்களுக்கு அரசியல் நோக்கமின்றி அபிவிருத்தி...

2025-11-12 09:26:45
news-image

சுற்றுலா செல்லும் போது சமூக வலைதளங்களில்...

2025-11-12 09:25:43
news-image

அடுத்த வருடம் சுகாதார துறையில் பாரிய...

2025-11-12 09:23:49
news-image

இன்றைய வானிலை

2025-11-12 06:42:43
news-image

விதாதா வேலைத்திட்டத்தை அமுல்படுத்த அமைச்சரவை அங்கீகாரம்

2025-11-11 16:48:02