கீதை­யுடன் பைபிள், குர்ஆன் சர்ச்­சை

By Robert

31 Jul, 2017 | 09:48 AM
image

பேய்க்­க­ரும்பில் திறக்­கப்­பட்ட அப்துல் கலாம் சிலை முன்பு பகவத் கீதை­யுடன் வைக்கப்பட்ட குர்ஆன், பைபிள் ஆகிய புனித நூல்­கள் அகற்றப்பட்டுள்ளன.

மறைந்த முன்னாள் ஜனா­தி­பதி அப்துல் கலாமின் 2ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்­னிட்டு 15 கோடி ­ரூ­பா செலவில் அமைக்­கப்­பட்ட மணி மண்­ட­பத்தை பிர­தமர் நரேந்­திர மோடி திறந்து வைத்தார். இம் மணி மண்­ட­பத்தில் வீணை மீட்­டு­வது போன்ற கலாம் சிலை வைக்­கப்­பட்டு இருந்­தது. சிலை முன்பு பகவத் கீதை நூலும் இருந்­தது. 

ஆனால் , அப்­துல்­கலாம் சிலை முன்பு பகவத் கீதை நூல் மட்டும் வைக்­கப்­பட்­டதால் சர்ச்சை ஏற்­பட்­டது. தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்­ளிட்ட தமி­ழக அர­சியல் கட்சித்தலை­வர்கள் பலரும் இதற்கு  எதிர்ப்பு தெரி­வித்து வந்­தனர்.

சர்ச்­சைகள் எழுந்­ததையடுத்து, பேய்க்­க­ரும்பில் உள்ள அப்துல் கலாம் சிலை அருகே அவ­ரது அண்ணன் பேரன் சலீம் குர்ஆன் மற்­றும் பைபி­ளை நேற்று வைத்­தார். பின்னர் நேற்று மதியம் அவ் இரு நூல்களையும் அகற்றிய அவர், பாதுகாப்பு காரணங்களுக்காக இரு நூல்களும் அகற்றப்பட்டன. இதனை அரசியல் ஆக்க வேண்டாம் என்றார். இதேவேளை கலாம் சிலை அருகே பை பிள் மற்றும் குர்ஆனை அனுமதியின்றி வைத்ததாக சலீம் மீது இந்து மக்கள் கட்சியினர் பொலிஸில் புகார் அளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right