பண்ணை மீன் சந்தையில் பல்வேறு பிரச்சினைகள் உள்ளன - இளங்குமரன் எம்.பி சுட்டிக்காட்டு!

Published By: Vishnu

17 Sep, 2025 | 08:31 PM
image

யாழ்ப்பாணம் - பண்ணை மீன் சந்தையில் பாரிய பிரச்சினைகள் இருக்கின்றன. எனவே மாநகர சபை முதல்வர் நேரில் வந்து பார்த்து அந்தப் பிரச்சினைகளை சீர் செய்யுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரன் தெரிவித்துள்ளார்.

16ஆம் திகதி செவ்வாய்க்கிழமை குறித்த பகுதிக்கு களவிஜயம் செய்து பார்வையிட்ட பின்னர் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ்ப்பாணம் மாநகர சபையினர் மின்சார கட்டணத்தை செலுத்தாததால் மின்சாரத் துண்டிப்பு இடம்பெற்றது. இதனால் வியாபாரிகள் தமது மீன்களை விற்பனை செய்ய முடியாது திரும்பிச் சென்றதை அவதானிக்க முடிந்தது. ஆனால் மின்சாரம் துண்டித்த நாளின் கட்டணம் மாநகரசபையால் மீன் வியாபாரிகளிடமிருந்து அறவிடப்பட்டது.

மீன் சந்தையில் இருக்கின்ற மலசலகூடம் மிகவும் மோசமாக காணப்படுகிறது. மாநகர சபை முதல்வரிடம் நான் கேட்பது யாதெனில், நீங்கள் களவிஜயம் செய்து நேரில் வந்து பாருங்கள் இங்கே எவ்வாறான நிலை காணப்படுகிறது என்று.

வெளிநாடுகளில் இருந்து நிதி உதவிகளை பெற்று அரசாங்கம் இவ்வாறான சந்தைகளை அமைத்து தரும்போது மாநகரசபையினர் ஆகிய நீங்கள் அதனை சிறந்த முறையில் பராமரியுங்கள்.

நல்லூர் திருவிழாவில் கடைகளில் கோடிக்கணக்கான வருமானத்தை ஈட்டியிருப்பீர்கள். அந்த நிதியை பயன்படுத்தி இவ்வாறான விடயங்களை சீர்படுத்துங்கள்.

கழிவகத்தின் முக அமைத்துவத்தை சீராக பேணுங்கள். இரவு ஒன்பது மணிக்கு பின்னர் சந்தைக்கு வந்து அங்கு இருக்கின்ற கழிவு நீரை எடுத்து செல்லுங்கள். பகலில் வந்து இடையூறு ஏற்படுத்தாதீர்கள். நீங்கள் பகலில் கழுகு நீரை எடுக்க வரும்போது சந்தைக்கு வருகின்ற மக்கள் திரும்பிச் செல்கின்றனர் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

விளக்கமறியலில் உள்ள நாமல் ராஜபக்சவுக்கு நாடாளுமன்றம்...

2026-09-07 18:30:59
news-image

குருநாகலில் அரிய கடல்வாழ் உயிரின ஓடுகளை...

2026-09-07 17:40:40
news-image

'கொஸ் மல்லி'யின் மைத்துனரான 'பூத களுவா'...

2026-09-07 17:39:52
news-image

சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் சில கருத்துகள்...

2026-09-07 17:38:14
news-image

பெண்கள், சிறுவர் பாதுகாப்பு குறித்து ஐ.நா....

2026-09-07 17:17:59
news-image

அம்பிட்டிய சுமண ரத்ன தேரருக்கு விளக்கமறியல்

2026-09-07 17:36:25
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்கள் இருவரின் 7 கோடி...

2026-09-07 16:01:44
news-image

சுற்றுச்சூழல் அறிக்கையிடலில் புதிய ஊடக முன்முயற்சி

2026-09-07 15:33:29
news-image

ராஜபக்‌ஷ ஆட்சியாளர்களின் ஊழல்களே நாட்டின் பொருளாதார...

2026-09-07 15:24:19
news-image

நுவரெலியா பேருந்து தரிப்பிடத்தில் போக்குவரத்து சேவையை...

2026-09-07 15:32:04
news-image

மண்சரிவினால் பாதிக்கப்பட்டது வீதி: பொலிஸ் வாகனங்களில்...

2026-09-07 15:14:09
news-image

நல்லூர் தேர் திருவிழாவன்று யாழ். நல்லூர்...

2026-09-07 15:01:28