ஒக்டோபரில் ஒளிபரப்பாகும் நடிகர் கண்ணா ரவியின் 'வேடுவன்' அசல் தமிழ் இணைய தொடர்

17 Sep, 2025 | 05:45 PM
image

'வீரா 'எனும் படத்தின் மூலம் அறிமுகமாகி இருந்தாலும், சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'கூலி' திரைப்படத்தில் வில்லனாக நடித்த நாகார்ஜுனாவின் மகனாக நடித்து ரசிகர்களிடம் பிரபலமான நடிகர் கண்ணா ரவி முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் 'வேடுவன்' எனும் அசல் தமிழ் இணையத் தொடர் ஜீ 5 எனும் இணையதளத்தில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் பத்தாம் திகதி முதல் ஒளிபரப்பப்படுகிறது என்பதை அதிகாரப்பூர்வமாக டிஜிட்டல் தளத்தினர் அறிவித்துள்ளனர்.

இயக்குநர் பவன் இயக்கத்தில் உருவாகி உள்ள 'வேடுவன் 'எனும் அசல் தமிழ் இணையத் தொடரில் கண்ணா ரவி , சஞ்சீவ் வெங்கட், ஐஸ்வர்யா ரகுபதி,  வினுஷா தேவி, லாவண்யா, ரேகா நாயர், பார்வதி, ஜீவா ரவி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஸ்ரீநிவாசன் தேவராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த இணையத் தொடருக்கு விபின் பாஸ்கர் இசையமைத்திருக்கிறார். ஜீ 5  டிஜிட்டல் தளத்திற்காக ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஸ்ரீநிதி சாகர் இந்த 'வேடுவன்' எனும் இணையத் தொடரை தயாரித்திருக்கிறார்.

ஜீ 5 டிஜிட்டல் தளத்தில் அசலான தமிழ் இணையத் தொடர்கள் வெளியாகி ரசிகர்களை தொடர்ந்து உற்சாகப்படுத்தி வருகிறது. அந்த வரிசையில் புதிய இணைய தொடரான 'வேடுவன்' ஒளிபரப்பாக உள்ளது .இதனை பார்வையாளர்களிடத்தில் அறிமுகப்படுத்தும் வகையில் இந்த இணையத் தொடரின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த டீசர் இணையத் தொடரை பார்வையிட வேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

'வேடுவன்' இணைய தொடர் குறித்து நாயகன் கண்ணா ரவி பேசுகையில், '' இது ஒரு மனிதனின் பயணத்தை பற்றிய கதை மட்டுமல்ல. அவன் எடுக்கும் முடிவுகள் -அதன் விளைவுகள்- ஆகிய இரண்டிலும் அதில் எது தவறு? எது சரி? என்பதனை ஆராயும் மெல்லிய கோடு தான் இந்த இணையத் தொடரின் சாராம்சம்'' என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

விளிம்பு நிலை மக்களின் வாழ்வியலை பேசும்...

2026-08-11 20:58:57
news-image

நடிகர் பஹத் பாசில் நடிக்கும் 'டோன்ட்...

2026-08-11 16:51:42
news-image

நடிகர் துல்கர் சல்மானின் 'ஐ அம்...

2026-08-11 16:21:14
news-image

விஜய் சேதுபதி - பூரி ஜெகன்நாத்...

2026-08-11 16:19:16
news-image

சிக்கலில் சிக்கிய ‘சியான்’ காணொளியை நீக்கினார்..!

2026-08-11 13:07:57
news-image

திடீரென உதட்டில் முத்தம் கொடுத்த ரசிகை.....

2026-08-11 10:20:42
news-image

சங்ககிரி ராஜ்குமார் நடிக்கும் 'ஒன் மேன்'

2026-08-10 17:11:32
news-image

ஜேம்ஸ் வசந்தனின் துள்ளல் இசையாக வெளியாகியுள்ள...

2026-08-10 17:11:21
news-image

நடிகர் ரிஷிகாந்த் நடிக்கும் 'மொத ராத்திரி'...

2026-08-10 17:09:05
news-image

ரசிகர்களுக்கு இரட்டை விருந்து வழங்கும் லேடி...

2026-08-10 16:51:16
news-image

சாதனை படைத்து வரும் நடிகர் யாஷ்...

2026-08-10 16:44:49
news-image

சூப்பர் குட் பிலிம்ஸ் அறிமுகப்படுத்தும் 45வது...

2026-08-10 16:42:52