வாடிக்கையாளர்களின் பேராதரவு இருந்தாலும்... சில தொழிலில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு உரிய லாபம் கிட்டாமல் இருக்கும்...! அலுவலகத்தில் பணியாற்றுபவர்களாக இருந்தால், தகுதி இருந்தும் திறமை இருந்தும்பதவி உயர்வு மட்டும் கிடைக்காமல் தவிப்பார்கள் தொழிற்சாலையில் பணியாற்றுபவர்களாக இருந்தால், உங்களுடைய அனுபவத்தின் ஊடாக பிரச்சனைக்கு தீர்வு கிடைத்தாலும் அதற்குரிய அங்கீகாரம் கிடைக்காது. இதன் பின்னணி- முன்னோர்களின் ஆசி எமக்கு கிடைக்கவில்லை என்பதை உணர்த்துகிறது.
அதாவது சோதிட மொழியில் விவரிக்க வேண்டும் என்றால் பித்ரு சாபம் - பித்ரு தோஷம் ஆகிய தோஷங்களால் ஆக்கிரமிக்கப்பட்டவர்கள் என பொருள். இத்தகைய தோஷம் உங்களுடைய ஜாதகத்தில் திசாநாதன், புத்திநாதன் சுப பலன்களை வழங்க வேண்டிய கடமையில் இருந்தாலும் அதனை பித்ரு தோஷம் பெற்றவர்களால் முழுமையாக பெற இயலாது. இதற்காகவே எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் பித்ருக்களின் சாபம் நீங்குவதற்காக பிரத்யேக வழிபாட்டினை முன்மொழிந்திருக்கிறார்கள்.
நாளாந்தம் ராகு காலம் என்று ஒரு தியாலம் வரும். ஒன்றரை மணி தியாலம் வரை நீடிக்கும் அந்த ராகு காலத்தில்... குலதெய்வத்தையும், இஷ்ட தெய்வத்தையும், ராகு பகவானின் அம்சமாக கருதப்படும் துர்க்கை அம்மனையும் மனதில் நிறுத்தி வழிபட வேண்டும். அத்துடன் 'கோளறு பதிகம்' வாசிக்க வேண்டும். இத்தகைய பிரார்த்தனையில் தொடக்க நிலையில் ஈடுபடுபவர்கள் இந்த கோளறு பதிகத்தை ஒலி வடிவிலும் கேட்டுக்கொண்டே உச்சரிக்கலாம்.
ராகு காலத்தில் கோளறு பதிகத்தை வாசிக்க வாசிக்க.. உங்களுடைய கர்மபலன் குறைந்து முன்னோர்களின் பரிபூரண ஆசை கிடைக்க பெற்று வாழ்க்கையில் வெற்றி பெறுவீர்.
தொகுப்பு: சுபயோக தாசன்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM