'சீடன்' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமாகி, 'கருடன்' படத்தின் மூலம் பிரபலமான மலையாள நடிகர் உன்னி முகுந்தன்- 'பாரத பிரதமர்' நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாறு பற்றிய திரைப்படத்தில் நரேந்திர மோடியாக நடிக்கிறார் என பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு படக்குழுவினர் உற்சாகத்துடன் அறிவித்துள்ளனர்.
இயக்குநர் கிராந்தி குமார் இயக்கத்தில் உருவாகும் 'மா வந்தே' என பெயரிடப்பட்டிருக்கும் 'பாரத பிரதமர் ' நரேந்திர மோடியின் சுய சரிதையை தழுவிய திரைப்படத்தில் நரேந்திர மோடியாக மலையாள நடிகர் உன்னி முகுந்தன் நடிக்கிறார்.
கே. கே. செந்தில் குமார் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ரவி பஸ்ரூர் இசையமைக்கிறார். இந்த திரைப்படத்தை சில்வர் காஸ்ட் கிரியேசன்ஸ் எனும் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எம் . வீர் ரெட்டி தயாரிக்கிறார்.
படத்தைப் பற்றி படக் குழுவினர் பேசுகையில், '' நரேந்திர மோடியின் வாழ்க்கையை தழுவி குறிப்பாக அவருக்கு எப்போதும் ஆதரவாக இருந்த தாயார் ஸ்ரீமதி ஹிரா பென் மோடி அவர்களுடனான ஆழமான பந்தம் - மக்களின் இதயங்களை வென்ற தருணம் - போன்ற விடயத்தை முதன்மைப்படுத்தி இருக்கிறோம்'' என்றனர்.
பாரத பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளான இன்று அவரது சுயசரிதை தழுவிய திரைப்படத்தைப் பற்றிய அறிவிப்பு வெளியாகி இருப்பது இணையவாசிகளை உற்சாகப்படுத்தி இருக்கிறது.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM