ஹட்டன் பிர­தே­சத்தில் அமைச்சர் பழனி திகாம்­பரம் கலந்­து­கொண்ட நிகழ்­வொன்றின் போது தனியார்  தொலைக்காட்சி ஊட­க­மொன்றின் செயற்­பா­டு­க­ளுக்கு அமைச்சின் செய­லாளர் இடை­யூறு   விளை­வித்த சம்­ப­வ­மொன்று நேற்று பதி­வா­னது.

தேசிய தாய்ப்பால் வாரம் தொடர்பில் தெளி­வு­ப­டுத்தும் பேரணி மற்றும் செய­ல­மர்வு நேற்று ஹட்­டனில் நடை­பெற்­றது. இதனை ஒளிப்­ப­திவு செய்­வ­தற்கு  அர­சாங்க தகவல் திணைக்­க­ளத்­தினால்  கடந்த 28ஆம் திகதி ஊட­க­வி­ய­லாளர்­க­ளுக்கு  தொலை­நகல் வாயி­லாக அறி­விக்­கப்­பட்­டி­ருந்­தது.

அதற்­க­மை­வாக மேற்­படி நிகழ்­வினை ஒளிப்­ப­திவு செய்­வ­தற்­காக பல ஊடக நிறு­வ­னங்­களை பிரதி­நி­தி­த்து­வப்­ப­டுத்தும் ஊட க­வி­ய­லா­ளர்கள் ஹட்­ட­னுக்கு சென்­றி­ருந்­தனர். இந்­நி­லையில்  மலை­நாட்டு புதிய கிரா­மங்கள், உட்­கட்­ட­மைப்பு வச­திகள் மற்றும் சமு­தாய அபி­வி­ருத்தி அமைச்சர் பழனி திகாம்­பரம் நிகழ்வில் உரை­யாற்­று­வ­தற்கு சற்று நேரத்­திற்கு முன்னர் அவரின் ஊடக செய­லாளர் அநுர ரத்­நா­யக்­க­ தனியார் தொலைக் காட்சி ஊடக நிறு­வ னம் ஒன்றின் இலட்­சினை பொறிக்­கப்­பட்ட ஒலி­வாங்­கியை அங்­கி­ருந்து எடுத்துச் சென்றார்.

இந்­நாட்டில் சக­ல­ருக்கும் தகவல் அறியும் சட்டம் பொது­வா­னது என்ற வகையில் ஊட ­க­மொன்றை பழி­வாங்கும் வகையில் செயற்­பட்­ட­மை­யினை கண்­டித்து ஊடகநிறு­வ­னங்கள் மற்றும் அமைப்­புக்கள் கூட்­டாக கண்­டனம் தெரி­வித்­துள்­ளன.

குறித்த தனியார் தொலைக்காட்சி நிறு­வ ­னத்தின் செயற்­பா­டு­களை பாதிக்கும் வகையில் செயற்­பட்­டமை தொடர்பில் ஹட்டன் பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பா­டொன்றும் பதிவு செய்­யப்­பட்­டுள்­ளது.

இந்நிகழ்வில் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே அதிதியாக கலந்துகொண்டிருந்தமையும் குறிப்பிடத் தக்கதாகும்.