சார்க் அமைப்பு நாடு­க­ளுடன் ஒன்­றி­ணைந்த மருத்­துவ கல்­லூ­ரியை இலங்­கையில் அமைக்க தயா­ரா­க­வுள்­ள­தாக சுகா­தார அமைச்சர் ராஜித சேனா­ரத்ன தெரி­வித்­துள்ளார்.

சார்க் அமைப்பு நாடு­க­ளி­லுள்ள சுகா­தார அமைச்­சர்­க­ளுக்­கான மாநாடு கொழும்பில் நேற்று முன்­தினம் ஆரம்­ப­மா­கி­யது. இதன்­போது தலை­மை­யு­ரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு கருத்து தெரி­வித்­துள்ளார்.

அவர் அங்கு  மேலும் குறிப்­பி­டு­கையில்,

காலத்­துக்­கேற்ற தகுந்த சந்­தர்ப்­பத்தில் இம்­மா­நாடு இங்கு தொடங்­கு­வது மகிழ்ச்­சி­ய­ளிக்­கின்­றது. நல்­லாட்சி அர­சாங்­கத்தில் கல்வி கற்கும் உரிமை பாது­காக்­கப்­பட்­டுள்­ளது. இதற்­கென ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பெரும் அர்ப்­ப­ணிப்­புடன் செயற்­பட்டு வரு­கின்றார்.

முன்­மொ­ழி­யப்­பட்­டுள்ள சார்க் அமைப்­புக்­க­ளுக்­கான ஒன்­றி­ணைந்த மருத்­துவ கல்­லூரி அமைப்­பதில் இலங்கை அதிக ஆர்வம் செலுத்­து­கின்­றது. சார்க் அமைப்­புக்­கான பிராந்­திய கிளை தற்­போது இந்­தி­யாவில் செயற்­பட்டு வரு­கின்­றது. 

தற்­போது இலங்­கையில் சுகா­தார அமைச்­சுக்­கான சவால்கள் அதி­க­மா­க­வுள்­ளன. அதனை நிவர்த்­திப்­ப­தற்­கான கொள்­கை­களை உரு­வாக்க வேண்டும்.

உல­க­ளவில் தெற்­கா­சிய நாடு­க­ளி­லேயே அதி­க­ள­வான புகை­யி­லைசார் நோய்­களை கொண்ட நோயா­ளர்கள் அடை­யாளம் காணப்­ப­டு­கின்­றனர். காச­நோயால் மட்டும் தெற்­கா­சி­யாவில் 3.1 மில்­லியன் மக்கள் பாதிக்­கப்­ப­டு­கின்­றனர்.

நாம் மலே­ரி­யாவை முற்­றிலும் அழித்த நாடு என்ற வகையில் அதற்­கான சவால்­களை திறம்­பட எதிர்­கொண்டோம். 

ஆனால் தொற்றா நோய்­க­ளினால் ஏற்­படும் பாதிப்­புகள் தொடர்பில் எவ்­வித கொள்­கை­களும் முறை­யாக நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தில்லை. 

இதன் கார­ண­மா­கவே இலங்கை அதி­க­மான கொள்­கை­களை கடந்த வரு­டத்­தி­லி­ருந்து முன்­னெ­டுத்து வரு­கின்­றது. 

உல­க­ளவில் சுகா­தா­ரத்­துறை பெரும் வளர்ச்­சி­ய­டைந்து வரு­கின்­றது. அந்த வளர்ச்­சிக்­கேற்ற மாறு­தல்­களை நாம் நமது பிராந்­தி­யத்­துக்குள் கொண்டு வர வேண்டும். சுகா­தார மேம்­பாடு மற்றும் அத்­தி­யா­வ­சிய சுகா­தார கொள்­கைகளை பின்­பற்ற அதிக காலம் தேவைப்­படும். 

ஆனாலும் அந்த கொள்­கை­களை நாம் நமது பிராந்­தி­யத்தில் கொண்­டு­வர அர்ப்­ப­ணிப்­புடன் செயற்­பட வேண்டும்.

சார்க் நாடுகளின் பிரதான பிரச்சினையாக விளங்கும் தொற்றா நோய்களை இல்லாமலாக்க தேவையான செயற்பாடுகளுக்கு நாம் ஒன்றிணைய வேண்டும். 

தற்போது சார்க் நாடுகளின் ஒன்றிணைந்த மருத்துவ கல்லூரியை இலங்கையில் அமைக்க பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளன என்றார்.