உலக சிறுவர்கள் தினத்தைக் முன்னிட்டு "சிறுவர்கள் தின தேசிய வாரம்"

17 Sep, 2025 | 01:04 PM
image

2025 ஆம் ஆண்டுக்கான உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு "சிறுவர் தின தேசிய வாரம்" பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ்  அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த அறிக்கையில் குறிப்பிடப்படுவதாவது, 

உலகப் போரின் போது ஏற்பட்ட சமூக மாற்றங்கள் காரணமாக சிறுவர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டனர்.

இதன்போது சிறுவர்கள் எதிர்கொண்ட பிரச்சினைகள் மற்றும் துன்பங்களை கருத்தில் கொண்ட ஐக்கிய நாடுகள் சபை,  சிறுவர்களுக்கென்று உரிமைகள் இருத்தல் வேண்டும் என தீர்மானித்தது.

இதனால் 1989 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20 ஆம் திகதி சிறுவர் உரிமைகள் தொடர்பான சாசனம் (CRC)  ஐக்கிய நாடுகள் சபையினால் அங்கீகரிக்கப்பட்டது.

இலங்கையும் 1991 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் உரிமைகள் தொடர்பான சாசனத்தில் கையெழுத்திட்டது. 

உலகின் பல நாடுகள் ஒக்டோபர் 1 ஆம் திகதியை "உலக சிறுவர் தினம்" என்று அங்கீகரித்து கொண்டாடுகிறது.

தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வருவதற்கு முன்னரே சிறுவர்களின் உரிமைகள், பாதுகாப்பு மற்றும் கல்வி தொடர்பில் வாதிட்டு வந்தது.

புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் சிறுவர்களுக்கு என்று பல செயற்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டது.

சிறுவர்களுக்கு சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய முடிவுகளை நடைமுறைப்படுத்த தேசிய மக்கள் சக்தி அர்ப்பணிப்புடன் உள்ளது.

"உலக சிறுவர் தினம்" ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி என்ற ஒரு நாள் கொண்டாட்டத்துடன் முடிந்து விடாது.

சிறுவர்களுக்காக நடவடிக்கை எடுக்க நாம் அர்ப்பணிப்புடன் உள்ளோம்.

எனவே, செப்டம்பர் 25 ஆம் திகதி முதல் ஒக்டோபர் 01 ஆம் திகதி வரையான காலப்பகுதி "சிறுவர் தின தேசிய வாரம்" ஆக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது என மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி பவுல்ராஜ் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தெங்கு பயிர்ச்செய்கையை மேம்படுத்த வடக்கு தென்னை...

2025-11-07 17:13:16
news-image

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வீட்டுக்...

2025-11-07 17:08:18
news-image

கிரான், பென்டுகால் பாலங்கள் அபிவிருத்திக்கு நிதி...

2025-11-07 17:09:47
news-image

இலங்கை மின்சார சபை மறுசீரமைக்கப்படும் -...

2025-11-07 17:02:58
news-image

கொழும்பில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான...

2025-11-07 16:56:46
news-image

மலையக மக்களுக்கு இந்திய அரசின்  குடியிருப்பு...

2025-11-07 17:00:15
news-image

செல்லப்பிராணிகள் இறந்த பின்னர் அதனை அடக்கம்...

2025-11-07 16:50:30
news-image

நவீன புகையிரதங்களை கொள்வனவு செய்ய நிதி...

2025-11-07 17:00:26
news-image

திண்ம கழிவகற்றலுக்கு நிதி ஒதுக்கீடு!

2025-11-07 16:38:58
news-image

முச்சக்கர வண்டி விபத்து ; இளைஞன்...

2025-11-07 16:40:59
news-image

கட்டுநாயக்க விமான நிலையத்தை அபிவிருத்தி செய்யும்...

2025-11-07 16:33:33
news-image

நானுஓயாவில் லொறி - வேன் விபத்து...

2025-11-07 16:35:29